» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பைக் விபத்தில் பிளஸ்-2 மாணவன் உயிரிழப்பு: குளச்சல் அருகே சோகம்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 4:58:56 PM (IST)
குளச்சல் அருகே பைக் விபத்தில் காயம் அடைந்த பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கொட்டில்பாடு காரித்தாஸ் காலனியை சேர்ந்தவர் ததேயூஸ். மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். இவருடைய மகன் சுர்ஜின் (17) குளச்சலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.கடந்த வாரம் சுர்ஜின் கொட்டில்பாட்டை சேர்ந்த தனது நண்பர்கள் சகாய அஸ்வின் (17), ரிஜோ (17) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். இந்த மோட்டார் சைக்கிளை சுர்ஜின் ஓட்டினார். வெள்ளியாகுளம் பகுதியை சென்றடைந்த போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரம் நின்ற மரத்தில் எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் சகாய அஸ்வின், ரிஜோ ஆகியோர் குளச்சலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஆனால் தலையில் பலத்த காயமடைந்த சுர்ஜினுக்கு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி : அமைச்சர் த.மனோ தங்கராஜ் வழங்கினார்!
சனி 15, நவம்பர் 2025 4:48:55 PM (IST)

பரோடா கிசான் பக்வாடா நிகழ்ச்சியில் ரூ.1 கோடி கடனுதவி : ஆட்சியர் அழகுமீனா வழங்கினார்
வெள்ளி 14, நவம்பர் 2025 10:24:39 AM (IST)

டெல்லி குண்டுவெடிப்பு குறித்து காங்கிரஸ் கட்சி மீது அவதூறு: விஜய்வசந்த் எம்.பி கடும் கண்டனம்!
புதன் 12, நவம்பர் 2025 12:53:06 PM (IST)

குமரி மாவட்டத்தில் மிக அரிதான உயர்தர போதைப்பொருள் விற்பனை: இருவர் கைது
செவ்வாய் 11, நவம்பர் 2025 8:52:31 PM (IST)

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வை கண்டித்து நாகர்கோவிலில் திமுக ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 11, நவம்பர் 2025 3:37:05 PM (IST)

சாலையில் கிடந்த பர்சை உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறை அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிகிறது..!
செவ்வாய் 11, நவம்பர் 2025 3:30:51 PM (IST)


.gif)