» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஜூலை 25ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா தகவல்!
வியாழன் 17, ஜூலை 2025 3:36:16 PM (IST)
கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வெளியிட்ட செய்திக் குறிப்பில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜுலை 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 25.07.2025 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து ஜுன் 2025 மாத விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கான பதில்கள் வழங்கப்படும். மேலும் விவசாயிகளின் விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியர் அவர்களால் நேரில் பெறப்படும்.
கோரிக்கை மனுக்கள் பதிவு செய்யும் வசதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) அலுவலகத்தில் செய்யப்பட்டிருக்கும். மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரடியாக தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருட வந்த இடத்தில் குறட்டை விட்ட திருடன்: கன்னியாகுமரியில் விசித்திர சம்பவம்!
சனி 7, மார்ச் 2026 4:30:54 PM (IST)

கன்னியாகுமரியில் ரூ.91.20 கோடி நலத்திட்ட உதவிகள்: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சனி 7, மார்ச் 2026 11:10:09 AM (IST)

ரயில் இன்ஜினை சிறைபிடித்து இளைஞர் காங்கிரசார் போராட்டம்: இரணியலில் பரபரப்பு!
வெள்ளி 6, மார்ச் 2026 4:49:05 PM (IST)

குமரி பயணிகளின் மிகுந்த வரவேற்பை பெற்று அதிக வருவாய் பெறும் அந்தியோதயா ரயில்
வெள்ளி 6, மார்ச் 2026 12:27:09 PM (IST)

நாகர்கோவிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு அந்தியோதயா ரயில் கட்டண விபரம்
வெள்ளி 6, மார்ச் 2026 10:14:29 AM (IST)

கபாடபுரமும், தென்மதுரையும் இங்கே! குமரிக்கண்டம் எங்கே? பெ.இராஜேஷ் செல்வரதி நூல் வெளியீட்டு விழா
வெள்ளி 6, மார்ச் 2026 8:01:34 AM (IST)

