» செய்திகள் » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நள்ளிரவில் உல்லாசம் கள்ளக்காதல் ஜோடியை பொறி வைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

திங்கள் 2, ஜனவரி 2012 5:47:51 PM (IST)

நாகர்கோவில் கோட்டாறு பகுதியை சேர்ந்தவர் சுசீலா (35). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் வெளிநாட்டில் உள்ளார். 

இந்நிலையில், தனது பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர் ஒரு வருடன், சுசீலாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. நள்ளிரவு நேரங்களில் சுசீலாவின் வீட்டுக்குள் அந்த வாலிபர் புகுந்து, மறுநாள் அதிகாலையில் வெளியே செல்வது வழக்கம்.

அரசல் , புரசலாக இருந்த இவர்களின் நெருக்கம் பின்னர் அக்கம் பக்கத்தினருக்கும் தெரிய வந்தது. இதையடுத்து இரு வரையும் எச்சரித்தனர். ஆனால் இவர்களின் கள்ளக்காதல் நீடித்து வந்தது. சுசீலாவின் வீடு பெரிய மாடி வீடாகும். சில சமயங்களில் 2, 3 நாட்கள் தொடர்ந்து அந்த வாலிபர் சுசீலாவின் வீட்டுக்குள்ளேயே பதுங்கி இருந்து உல்லாசமாக இருப்பது வழக்கம். 

சுசீலா வீட்டில் இரு குழந்தைகளை தவிர வேறு யாரும் இல்லை. அவரது வீட்டுக்குள் வேறு யாரும் செல்வதும் இல்லை. பலமுறை எச்சரித்தும் இருவரும் கேட் காததால், இருவரையும் கையும், களவுமாக பிடிக்க பொதுமக்கள் முடிவு செய்தனர். இதற்காக சுசீலாவின் வீட்டை ரகசியமாக கண்காணித்து கொண்டி ருந்தனர். 

இரவு நேரங்களில் சிலர் மறைந்து இருந்து சுசீலா வின் வீட்டை நோட்டமிட்டவாறு இருந்தனர். இந்த நிலையில் நேற்று (1-ம்தேதி) புத் தாண்டையொட்டி எப்படியும் இருவரும் சந்திப் பார்கள் என்பதால், சற்று கவன மாகவே சுசீலாவின் வீட்டை நோட்ட மிட்டு கொண்டிருந் தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் திடீரென அந்த வாலிபர் தனது வீட்டில் இருந்து வெளியே வந்தார். 

பின்னர் அருகில் உள்ள ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவரில் ஏறி, சுசீலா வீட்டின் மாடிக்கு சென்ற அவர், சிறிது நேரத்தில் சுசீலா வின் வீட்டுக்குள் புகுந்தார். அதுவரை சுசீலாவின் வீட்டில் லைட் எரிந்து கொண் டிருந்தது. அந்த வாலிபர் வீட் டுக்குள் புகுந்ததும், சுசீலா லைட்டை ஆப் செய்து விட் டார். பின்னர் இருவரும் உல் லாசமாக இருக்க தொடங்கினர்.

இதற்கிடையே லைட் ஆப் செய்யப்பட்ட சிறிது நேரத்தில் சுசீலாவின் வீட்டு அருகில் மறைந்து இருந்த பொதுமக்கள் சிலர், அவரது வீட்டு கதவை தட்டினர். தொடர்ந்து கதவை தட்டுவதை அறிந்து, சுசீலா கதவை திறந்தார். முதலில் எது வும் தெரியாதது போல் பேசி னார். ஆனால் பொது மக்கள் தரப்பில், நாங்கள் ஏற்கனவே உனது கள்ளக்காதலன் வீட்டுக்குள் புகுந்ததை பார்த்து விட்டு தான் வருகிறோம் . அவனை வெளியே அனுப்பு என்றனர். 

இதனால் வேறு வழியின்றி, தனது படுக்கை யறையில் பதுங்கி இருந்த கள்ளக் காதலனை சுசீலா வெளியே அனுப்பி வைத்தார். அவரை சுற்றி வளைத்து பொதுமக்கள் சிலர் தாக்க முயன்றனர். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் சுமார் 200 க்கும் மேற்பட்டவர்கள் சுசீலாவின் வீட்டு முன் திரண்டனர். இதை யடுத்து கோட்டாறு போலீ சுக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது. அவர்கள் நேரில் வந்து கள்ளக் காதல் ஜோடியை எச்சரித்தனர்.


மக்கள் கருத்து

தினேஷ்புதன் 4, ஜனவரி 2012 - 11:21:21 AM | Posted IP 117.2*****

இவனுகளுக்கு வேற வேல இல்லியா எவண்டா எங்க போவணு பார்த்துட்டு இருபனுகளோ வெட்டி பசங்க .. உங்க வீடுக வந்தான் .. போத்திக்கிட்டு போக வேண்டியதுதானா ...லூசு பைலுக ..

AMSTRONGசெவ்வாய் 3, ஜனவரி 2012 - 06:30:53 PM | Posted IP 122.1*****

THAGATHUKU THANNI KUTUTHA THAPPA

முருகேஷ்செவ்வாய் 3, ஜனவரி 2012 - 02:22:54 PM | Posted IP 220.2*****

பாவம் என்னை போல் ஒருவன்

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory