» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நீதிமன்ற வளாகத்தில் பெண் போலீசை மிரட்டி கோப்புகளை பறித்த வக்கீல் கைது
புதன் 11, ஜூன் 2025 8:53:34 AM (IST)
பத்மநாபபுரம் நீதிமன்ற வளாகத்தில் பெண் போலீசை மிரட்டி கோப்புகளை பறித்த வக்கீல் கைது செய்யப்பட்டார்.
குமரி மாவட்டம், குலசேகரம் காவல் நிலையத்தில் போலீசாக சபீனா பணியாற்றி வருகிறார். இவர் கோர்ட்டு பணிகளை கவனித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் கோர்ட்டு பணி தொடர்பான கோப்புகளுடன் தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் கோர்ட்டுக்கு வந்தார்.
அப்போது அங்கு குற்றவியல் கோர்ட்டில் உள்ள வழக்கை முடிப்பதற்காக வந்த நபர்களிடம், அங்கு நின்ற 2 வக்கீல்களை குறிப்பிட்டு அவர்களை பார்க்குமாறு கூறியுள்ளார். இதை அங்கு நின்ற வக்கீல் ஜெஸ்டின் (35) கவனித்து கொண்டிருந்தார். அவர் பெண் போலீசை பார்த்து, ‘என்னை பார்த்தால் வக்கீல் போல தெரியவில்லையா?’ என கேட்டு தகராறு செய்துள்ளார். அத்துடன் பெண் போலீசின் கையில் இருந்த கோப்புகளை பறித்து எறிந்து கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பெண் போலீஸ் சபீனா தக்கலை போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில் வக்கீல் ஜெஸ்டின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். இவர் கைது செய்யப்பட்டதை அறிந்த ஏராளமான வக்கீல்கள் காவல் நிலையத்தில் குவிந்தனர். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிவிரைவு படை போலீசார் வரவழைக்கப்பட்டு காவல் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து இரவில் வக்கீல் ஜெஸ்டினை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர். இதனையடுத்து அங்கிருந்த வக்கீல்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் தக்கலை காவல் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாகர் மித்ரா திட்டத்தில் காலிப் பணியிடங்கள் நியமனம் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
சனி 19, ஜூலை 2025 11:55:09 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்: இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!
சனி 19, ஜூலை 2025 11:38:27 AM (IST)

பேச்சிப்பாறை அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் : ஆட்சியர் திறந்து வைத்தார்!
வெள்ளி 18, ஜூலை 2025 5:27:44 PM (IST)

நாகர்கோவிலில் ஆசிரியர்கள் சாலை மறியல்: பெண்கள் உட்பட100க்கும் மேற்பட்டோர் கைது
வெள்ளி 18, ஜூலை 2025 4:04:20 PM (IST)

பிரதமர் வருகை: சோழமண்டலத்தில் இருந்து ரயில் வருமா? எதிர்பார்ப்பில் குமரி பயணிகள்!
வியாழன் 17, ஜூலை 2025 5:16:18 PM (IST)

பொருட்காட்சியில் நைட்டி அணிந்து குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்: 7பேர் மீது வழக்குப் பதிவு
வியாழன் 17, ஜூலை 2025 5:02:12 PM (IST)
