» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அஞ்சல் துறை சார்பில் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி : ஜூன் 15 வரை விண்ணப்பிக்கலாம்!
புதன் 11, ஜூன் 2025 8:38:13 AM (IST)
கன்னியாகுமரி கோட்டத்தில் அஞ்சல் துறை சார்பில் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி ஜூன் 20-ம் தேதி தொடங்குகிறது.
கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய தபால் துறையும், இளைஞர் நலத்துறை மற்றும் விளையாட்டு அமைச்சகமும் இணைந்து, இளைஞர்களுக்காக ஒரு புதிய இலவச செய்முறை பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
"செய்முறை பயிற்சி திட்டம்" என அழைக்கப்படும் இந்த பயிற்சிக்கு, மை பாரத் போர்ட்டல் (www.mybharat.gov.in) வாயிலாக விண்ணப்பிக்கலாம். குமரி மாவட்டத்தில் 188 கிளை தபால் நிலையங்களுக்கு தலா 2 பேர் வீதம் 376 பயிற்சியாளர்கள் இதில் சேரலாம். பயிற்சி வருகிற 20-ந் தேதி முதல் அடுத்த மாதம் 7-ந் தேதி வரை 15 நாட்கள் (மொத்தம் 120 மணி நேரங்கள்) நடைபெறும். குறைந்தபட்சம் உயர்நிலைப்பள்ளி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் முக்கிய அம்சங்கள் விவரம் வருமாறு:-
தபால் துறை செயல்பாடுகள் குறித்த அடிப்படை வழிகாட்டல், பார்சல் வகைப்படுத்துதல், வினியோகம், கவுண்ட்டர் பணிகள், ஆவண கையாளல் மற்றும் தபால் நிலைய உதவிப்பணிகள், தபால் நிலைய சேமிப்புத் திட்டங்கள், தபால் ஆயுள் காப்பீடு மற்றும் தபால் தலை சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு "டாக் சவ்பால்" எனும் தபால் கிராம சபைக்கூட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பு போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும்.
இந்த பயிற்சி இளைஞர்களை சமூக சேவையில் ஈடுபடுத்துவதோடு தபால் துறையின் கிராமப்புற சமூக பங்களிப்பை நேரில் அறிந்து கொள்ளும் அரிய வாய்ப்பாக அமைகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி வருகிற 15-ந் தேதி ஆகும். விண்ணப்பங்களை www.mybharat.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். தகுதியுள்ளவர்கள் தவறாமல் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாகர் மித்ரா திட்டத்தில் காலிப் பணியிடங்கள் நியமனம் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
சனி 19, ஜூலை 2025 11:55:09 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்: இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!
சனி 19, ஜூலை 2025 11:38:27 AM (IST)

பேச்சிப்பாறை அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் : ஆட்சியர் திறந்து வைத்தார்!
வெள்ளி 18, ஜூலை 2025 5:27:44 PM (IST)

நாகர்கோவிலில் ஆசிரியர்கள் சாலை மறியல்: பெண்கள் உட்பட100க்கும் மேற்பட்டோர் கைது
வெள்ளி 18, ஜூலை 2025 4:04:20 PM (IST)

பிரதமர் வருகை: சோழமண்டலத்தில் இருந்து ரயில் வருமா? எதிர்பார்ப்பில் குமரி பயணிகள்!
வியாழன் 17, ஜூலை 2025 5:16:18 PM (IST)

பொருட்காட்சியில் நைட்டி அணிந்து குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்: 7பேர் மீது வழக்குப் பதிவு
வியாழன் 17, ஜூலை 2025 5:02:12 PM (IST)
