» செய்திகள் » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அணுமின் நிலையத்தை மூடும் வரை போராட்டம் தான்: கோவளம் மாநாட்டில் உதயகுமார் உறுதி!!
வியாழன் 29, டிசம்பர் 2011 5:39:36 PM (IST)
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி கன்னியாகுமரியை அடுத்த கோவளத்தில் இன்று அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்க மாநாடு நடைபெற்றது அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்க மீனவர் அமைப்புக்களும், கூடங்குளம் பகுதி மக்களும் சேர்ந்து இந்த மாநாட்டை நடத்துகின்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்க இடிந்தகரை பகுதி மீனவர்கள் 18 பேரூந்துகளிலும்,5 மினி பேரூந்துகளிலும், கூடங்குளம் பகுதி மக்கள் 15 மினி பேரூந்துகளிலும் சென்றனர்
தூத்துக்குடி, புன்னக்காயல், பழையகாயல், மணப்பாடு, பெரியதாழை, உவரி, கன்னியாகுமரி, சின்னமுட்டம், கோவளம் உள்ளிட்ட மீனவ கிராம மக்களும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
காலையில் நடைபெற்ற அறிவரங்கத்திற்கு எம்.ஜி. தேவசகாயம் தலைமை தாங்கினார். கன்னியாகுமரி பங்குத் தந்தை லியோன் கென்சன் வரவேற்புரை நிகழ்த்தினார். அறிவரங்கத்தில் டாக்டர் உதயகுமார், மனோ தங்கராஜ், பங்குத்தந்தை ஜேசுராஜ், ராஜாவூர் ராஜேந்திரன், திருநெல்வேலி பேராசிரியர் அருணாச்சலம்,
டெல்லி பத்திரிகையாளர் பிரபுல் பித்வாய், புதுடில்லி விஞ்ஞானி சௌமியா தத்தா, கேரள விஞ்ஞானிகள் நீலகண்டன், பத்மநாபன், அலகாபாத் விஞ்ஞானி பேராசிரியர் பன்வாரிலால் சர்மா, கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி, கோயம்புத்தூர் மருத்துவர் ஆர்.ரமேஷ், மதுரை வழக்கறிஞர் லஜபதிராய், சென்னை வழக்கறிஞர் மோகன், சென்னை பேராசிரியர் .சிவகுமார், நாகர்கோவில் விஞ்ஞானி லால் மோகன், நாகர்கோவில் மருத்துவர் சுமித்ரா ரகுவரன், அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கம் டேவிட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இந்த இயக்கத்தை வழி நடத்தி வரும் டாக்டர் உதயகுமார் கூறுகையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடும் வரையில் பல்வேறு போராட்டங்களை நடத்துவோம், இன்று நடக்கும் மாநாட்டில் அறிவியல் அறிஞர்கள், வழக்கறிஞர்கள், பொறியியல் நிபுணர்கள், அரசியல் கட்சி நிபுணர்கள் உரையாற்றுவார்கள் இந்த மாநாடு வெற்றிகரமாக அமையும். எனவே மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் கூடங்குளம் அணுமின்நிலையத்தை உடனடியாக மூட வேண்டும் என்று அவர் கூறினார்.
மக்கள் கருத்து
pasamவியாழன் 29, டிசம்பர் 2011 - 10:02:50 PM | Posted IP 117.2*****
நாட்டில் நிலவும் விலை வாசி அமெரிக்காவின் கைக்கூலி ஆனதன் விளைவு என்பது லஞ்சம் வாங்கி பிளைபவருக்கு எப்படி புரியும் ?
pasamவியாழன் 29, டிசம்பர் 2011 - 10:02:03 PM | Posted IP 117.2*****
நாட்டில் நிலவும் விலை வாசி அமெரிக்காவின் கைக்கூலி ஆனதன் விளைவு என்பது லஞ்சம் வாங்கி பிளைபவருக்கு எப்படி புரியும் ?
printhaவியாழன் 29, டிசம்பர் 2011 - 09:49:30 PM | Posted IP 117.2*****
உம் வீட்டு நிலத்தில் ஒரு அடியை நான்கு வழி சாலை அமைக்க முதலில் கொடுத்து விட்டு தேச பக்தி பற்றி பேசும்.
unmaiவியாழன் 29, டிசம்பர் 2011 - 09:45:21 PM | Posted IP 117.2*****
அணு மின் நிலைய எதிர்ப்பு போராட்டம் 28 வருடம் நடப்பது உமக்கு தெரியுமா இன்று தான் தேசம் திரும்பி பார்க்குது அறிவு ஜீவியே
pasamவியாழன் 29, டிசம்பர் 2011 - 09:41:45 PM | Posted IP 117.2*****
மரியாயதயாக பேச கற்றுகொள்ளும் தேச பக்தரே ! அணு உலை எதிர் பார்பாளர்களுக்கு எதிராக கூவ உமக்கு காசு கொடுத்தவர் யார் என்று சொல்லும் அமெரிக்காவுக்கு அடிவருடும் உமது பிரதமரிடம் முதலில் விசாரணை நடக்கட்டும்
TURE INDIANவியாழன் 29, டிசம்பர் 2011 - 08:49:28 PM | Posted IP 117.2*****
UNGALUKKU ETHUDA EVVALAU PANAM ....AMERIKKA KAI KOOLIKALAI
UNGALAI APPADIEA NADUKADATHANUM
TURE INDIANவியாழன் 29, டிசம்பர் 2011 - 08:45:51 PM | Posted IP 117.2*****
AMERIKKA VIN KAI KEELI....
EUVALAU NALA ENGADA PONENGA.... AMERIKKA KAI KOOLEEKALE....
NATTA VILANGA VIDAMATTINGAL UNGALAI ELLAM NADUKADATHA VENDUM
சதானந்த்,வியாழன் 29, டிசம்பர் 2011 - 06:17:53 PM | Posted IP 178.1*****
கூடங்குளம் அணுமின் நிலையம் உடனடியாய் மூடப்பட வேண்டும்..பின்பு ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து அணுமின் நிலையங்களும் மூட வேண்டும். உலகம் பல்லாண்டு வாழ வேண்டும்.. நாம் அனைவரும் உலகத்தை பாதுகாப்பாய் அடுத்த தலைமுறைக்கு கொடுக்க சபதம் ஏற்போம்..
மேலும் தொடரும் செய்திகள்

ஏட்டிக்கு போட்டி : கூடன்குளத்தில் உண்ணாவிரதம் ... நாகர்கோவிலில் உண்ணும் விரதம்
புதன் 22, பிப்ரவரி 2012 6:26:37 PM (IST)

சாம்பல் புதனான இன்று நெற்றியில் சாம்பல் பூசி நற்செய்தி வழங்கிய பங்கு தந்தையர்கள்
புதன் 22, பிப்ரவரி 2012 4:06:27 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு : கன்னியாகுமரி மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம்
புதன் 22, பிப்ரவரி 2012 1:25:18 PM (IST)

கொலை வழக்கில் தொடர்பு: அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலர் நீக்கம் : ஜெ.அதிரடி
திங்கள் 20, பிப்ரவரி 2012 4:29:02 PM (IST)

தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலியர்கள்
வியாழன் 16, பிப்ரவரி 2012 11:39:07 AM (IST)

குமரியை தமிழகத்துடன் இணைக்கப் போராடிய தாணுலிஙக நாடாரின் பிறந்த நாள் விழா
புதன் 15, பிப்ரவரி 2012 8:46:41 PM (IST)



pasamவியாழன் 29, டிசம்பர் 2011 - 10:04:15 PM | Posted IP 117.2*****