» செய்திகள் » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஆபாச படம் எடுத்து பலாத்காரம் செய்ததாக வழக்கு போடுவேன்: வாலிபரை மிரட்டிய கள்ளக்காதலி
செவ்வாய் 27, டிசம்பர் 2011 5:20:48 PM (IST)
ஆசைக்கு இணங்க மறுத்தால், ஆபாச படம் எடுத்து கற்பழித்ததாக போலீசில் சிக்க வைப்பேன் என கள்ளக்காதலி மிரட்டுவதாக வாலிபர் காவல் நிலையத்தில் கூறி கதறி அழுதார்.
நாகர்கோவில் கோட்டாறு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், கோட்டாறு காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில் அந்த வாலிபர் கூறியிருந்ததாவது :எனக்கும், எங்கள் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. நாங்கள் இருவரும் ஒரே மதத்தை சேர்ந்தவர்கள். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
அவரது கணவர் வெளிநாட்டில் இருந்து வந்ததால், எங்களின் கள்ளக்காதலுக்கு எந்த தடையும் இல்லாமல் இருந்தது. நாங்கள் இருவரும் பல இடங்களுக்கு சென்று மிகவும் உல்லாசமாக இருந்து வந்தோம். எனக்கு தேவையான உதவிகளை அவளும், அவளுக்கு தேவையான உதவிகளை நானும் செய்தேன். அவள் சம்மத்துடன் தான், நான் அவளுடன் நெருங்கி பழகினேன்.
இந்த நிலையில் எனக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து எங்கள் வீட்டில் திருமணம் செய்து வைத்தனர். எனது கள்ளக்காதலியும் நான் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தாள். அதன் பேரில் எனக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு நான் திருந்தி வாழ முடிவு செய்தேன். மனைவியை தவிர வேறு எந்த பெண்ணையும் நினைத்து பார்க்க என் மனம் இடம் தர வில்லை.
இதனால் எனது கள்ளக்காதலியிடம் இருந்து விலக தொடங்கினேன். அவளை சந்தித்து கொள்வதை குறைத்து கொண்டேன். என்னை அவள் அழைத்த போது, அறிவுரை கூறி திருத்த நினைத்தேன். ஆனால் அவள் மனம் மாற வில்லை. நான் எப்போதெல்லாம் அழைக்கிறேனோ, அப்போதெல்லாம் நீ வர வேண்டும். எனது ஆசைக்கு நீ வராமல் ஏமாற்றினாய் என்றால் உன்னை சும்மா விட மாட்டேன்.
என்னை நீ ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி, கற்பழித்து விட்டாய் என காவல்துறையில் புகார் அளிப்பேன் என மிரட்டுகிறார். எனவே இந்த பிரச்சினையில் இருந்து என்னை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறி இருந்தார்.
புகாரை படித்து பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் இப்படியும் ஒரு பெண் நடந்து கொள்வாரா? என யோசித்த காவல்துறையினர், அந்த வாலிபரின் புகார் உண்மை தானா? என்பதை கண்டறிய சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண் அந்த வாலிபரிடம் அளவு கடந்த அன்பும், பாசமும் வைத்திருந்தது தெரிய வந்தது.
அவன் தான் எனது உலகம். எங்களை பிரிக்க நினைக்காதீர்கள். அவன் சந்தோஷத்துக்காகவே நான் வாழ்கிறேன் என்றெல்லாம் கூறினார். இதையடுத்து பிரச்சினையை சுமூகமாக முடிக்கும் வகையில் கோட்டாறு காவல் நிலையத்தில் பேச்சு வார்த்தை நடந்தது. இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் பேசினர்.
சம்பந்தப் பட்ட பெண்ணுக்கு அறிவுரைகள் கூறினர். இனி இருவரும் சந்தித்து கொள்ள கூடாது. போனில் பேசக்கூடாது. இருவரும் அவரவர் குடும்பத்துக்காகவே வாழ வேண்டும். என்றெல்லாம் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். சுமார் 3 மணி நேர பேச்சு வார்த்தைக்கு பிறகு அவரவர் குடும்பத்தாருடன் சென்றனர்.
மக்கள் கருத்து
சுமதிபுதன் 28, டிசம்பர் 2011 - 05:09:57 PM | Posted IP 117.2*****
வாழ்கை பிரச்சனை முக்கியம் பெண்களே இப்படி என்றால் ஆண்களை சொல்லவா செய்ய வேண்டும்.
Indianசெவ்வாய் 27, டிசம்பர் 2011 - 06:51:20 PM | Posted IP 110.2*****
kanavan pogum pothu neum sendrukalam, illayel andrey poi sentherukalam ,
மேலும் தொடரும் செய்திகள்

ஏட்டிக்கு போட்டி : கூடன்குளத்தில் உண்ணாவிரதம் ... நாகர்கோவிலில் உண்ணும் விரதம்
புதன் 22, பிப்ரவரி 2012 6:26:37 PM (IST)

சாம்பல் புதனான இன்று நெற்றியில் சாம்பல் பூசி நற்செய்தி வழங்கிய பங்கு தந்தையர்கள்
புதன் 22, பிப்ரவரி 2012 4:06:27 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு : கன்னியாகுமரி மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம்
புதன் 22, பிப்ரவரி 2012 1:25:18 PM (IST)

கொலை வழக்கில் தொடர்பு: அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலர் நீக்கம் : ஜெ.அதிரடி
திங்கள் 20, பிப்ரவரி 2012 4:29:02 PM (IST)

தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலியர்கள்
வியாழன் 16, பிப்ரவரி 2012 11:39:07 AM (IST)

குமரியை தமிழகத்துடன் இணைக்கப் போராடிய தாணுலிஙக நாடாரின் பிறந்த நாள் விழா
புதன் 15, பிப்ரவரி 2012 8:46:41 PM (IST)



murugaraamபுதன் 18, ஜனவரி 2012 - 03:49:14 PM | Posted IP 117.2*****