» செய்திகள் » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அணு நிலையத்திற்கு எதிரான மக்கள் இயக்க மாநாட்டிற்கான இடம் மாற்றம் : உதயகுமார் தகவல்.
செவ்வாய் 27, டிசம்பர் 2011 5:01:16 PM (IST)
கன்னியாகுமரியில் வரும் 29ம் தேதி கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் மாநாடு நடக்கிறது. இம்மாநாடு கன்னியாகுமரி அந்தோணியார் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இது இடமாற்றம் செய்யப்பட்டு கோவளத்தில் உள்ள சிறுவர் பூங்கா மைதானத்தில் நடக்கவுள்ளது.
இது தொடர்பாக போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் நிர்வாகிகள் இன்று குமரி மாவட்ட எஸ்.பி லட்சுமியை சந்தித்து மனு அளித்தனர். பின்னர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது, வரும் டிச.29ம் தேதி கன்னியாகுமரியில் நடக்கும் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக அறிவரங்கம் நடக்கிறது. இதில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவ சகாயம் பேசுகிறார்.
மாநாட்டில் பாமக சார்பில் ஜிகே மணி, விடுதலை சிறுத்தைகள் சார்பில் திருமாவளவன் மதிமுக சார்பில் நாஞ்சில் சம்பத், வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன், குளத்தூர் மணி மற்றும் பிரபல சமூக சேவகர்கள், வர்த்தகர்கள் கலந்து கொள்கின்றனர்.
கூடங்குளம் போராட்டம் நீர்த்து போய் விட்டதாக கூறுகிறார்கள். ஆனால் 137 நாளாக போராட்டம் நீடித்து வருகிறது. தமிழக அரசு கூடங்குளம் மக்களின் உணர்வுக்கு ஆதரவாக உள்ளது. நேற்று முன்தினம் பிரதமரை சந்தித்த முதல்வர் ஜெயலலிதா மாற்று முறை மின்சார தயாரிப்புக்கான 6 செயல்முறை திட்டம் குறித்த மனுவை அளித்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏட்டிக்கு போட்டி : கூடன்குளத்தில் உண்ணாவிரதம் ... நாகர்கோவிலில் உண்ணும் விரதம்
புதன் 22, பிப்ரவரி 2012 6:26:37 PM (IST)

சாம்பல் புதனான இன்று நெற்றியில் சாம்பல் பூசி நற்செய்தி வழங்கிய பங்கு தந்தையர்கள்
புதன் 22, பிப்ரவரி 2012 4:06:27 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு : கன்னியாகுமரி மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம்
புதன் 22, பிப்ரவரி 2012 1:25:18 PM (IST)

கொலை வழக்கில் தொடர்பு: அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலர் நீக்கம் : ஜெ.அதிரடி
திங்கள் 20, பிப்ரவரி 2012 4:29:02 PM (IST)

தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலியர்கள்
வியாழன் 16, பிப்ரவரி 2012 11:39:07 AM (IST)

குமரியை தமிழகத்துடன் இணைக்கப் போராடிய தாணுலிஙக நாடாரின் பிறந்த நாள் விழா
புதன் 15, பிப்ரவரி 2012 8:46:41 PM (IST)


