» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சுவர் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகளை இயக்கக் கூடாது மின்வாரியம் அறிவுறுத்தல்!
வெள்ளி 29, நவம்பர் 2024 5:58:38 PM (IST)
மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
மழைக்காலங்களில் ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம். வீட்டின் உட்புற சுவர் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்கக் கூடாது. மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் உபயோகிக்கக் கூடாது என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.