» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் பெண் மருத்துவர் மீது தாக்குதல் : கணவர் கைது
வெள்ளி 29, நவம்பர் 2024 4:43:55 PM (IST)
தூத்துக்குடியில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து பெண் மருத்துவரை தாக்கிய அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி பக்கிள்புரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயசீலன் மகன் டேனியல்ராஜ் (36). இவர் பாத்திமா நகரைச் சேர்ந்த ரேவதி (35) என்ற பெண்ணை கடந்த 2022ல் காதல் திருமணம் செய்து கொண்டார். ரேவதி, பிரையன்ட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணி புரிந்து வருகிறார்.
குடும்ப பிரச்சனை காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் நேற்று ரேவதி மருத்துவமனையில் பணி செய்து கொண்டிருந்த போது மதுபோதையில் டேனியல்ராஜ், அங்கு சென்று தகராறு செய்து அவரை கையால் தாக்கினாராம். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் ரேவதி அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்தமழரசன் வழக்குப் பதிந்து டேனியல் ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் சீரமைப்பு பணிகள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வெள்ளி 21, மார்ச் 2025 12:46:49 PM (IST)

மார்ச் 24ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
வெள்ளி 21, மார்ச் 2025 12:21:41 PM (IST)

கன்னியாகுமரி - சார்லபள்ளி கோடைகால சிறப்பு ரயில்கள்: முன்பதிவு நாளை தொடங்குகிறது!
வியாழன் 20, மார்ச் 2025 5:26:26 PM (IST)

தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி : கன்னியாகுமரியில் பரபரப்பு
வியாழன் 20, மார்ச் 2025 11:17:44 AM (IST)

கிருஷ்ணன்கோவில் நியாயவிலைக்கடையில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா திடீர் ஆய்வு
புதன் 19, மார்ச் 2025 5:07:27 PM (IST)

வேலைவாய்ப்புகளை பெருக்க தவறிய மத்திய அரசு: பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி பேச்சு
புதன் 19, மார்ச் 2025 4:14:06 PM (IST)
