» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி மாவட்டத்தில் 9 கோடி மதிப்பீட்டில் பணிகள் : அமைச்சர் பி.கீதாஜீவன் தகவல்!
செவ்வாய் 29, அக்டோபர் 2024 7:41:47 PM (IST)
முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் 9 கோடி மதிப்பீட்டில் 76 பணிகள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்று அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்தார்..
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து சமூக நலத்துறை மூலம் குழந்தைகள், மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி அனைவரையும் முன்னேற்றப் பாதையில் முன்னேற்றம் அடைய செய்து கொண்டுள்ளார்கள் என பெருமிதத்தோடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் இன்று(29.10.2024) தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 2022-23ம் ஆண்டு பெண் குழந்தைகள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் விதமாக அரசு பள்ளியில் மாணவிகளின் உயர் கல்வி சேர்ந்தவர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இத்திட்டமானது முதற்கட்டமாக 05.02.2022 அன்று துவங்கப்பட்டு இச்சிறப்பு வாய்ந்த திட்டமானது 2024-2025 ஆம் கல்வியாண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில் 3.50 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
தமிழ்ப்புதல்வன் திட்டம் எனும் மகத்தான திட்டம் தமிழக முதலமைச்சர் அவர்களால் ஆகஸ்டு மாதம் 9ம் தேதி தொடங்கப்பட்டு 2024-2025ஆம் கல்வியாண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் 242827 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். இதற்காக ரூ.360 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கு மாதம் ரூ.1000 வீதம் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
ஊட்டச்சத்தை உறுதி செய்” என்ற திட்டத்தின் கீழ் பிறந்து 6 மாதம் வரையுள்ள ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்களுக்கு 2 ஊட்டச்சத்து பெட்டகமும், 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள ஊட்டச்சத்து குறைபாடுள்ள 9,30,610 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து சிகிக்சை நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட உணவு வகை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்திய பின்பு தற்போது கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய 75000 குழந்தைகளை கண்டறியப்பட்டு அவர்களின் ஊட்டச்சத்தினை மேம்படுத்துவதற்காக குழந்தைகளின் தாய்மார்களுக்கு ரூ.22.20 கோடி செலவில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி ஊட்டச்சத்தை உறுதிசெய்யும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
புதிய தோழி விடுதிகள் - தாம்பரம், திருச்சிராப்பள்ளி, கூடுவாஞ்சேரி. தற்போது புதிதாக கட்டப்பட்டு வரும் தோழி விடுதிகள் - திருவண்ணாமலை, ஓசூர் மற்றும் சென்னை (செயிண்ட் தாமஸ் மவுண்ட்). புனரமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் தோழி விடுதிகள் - பெரம்பலூர், சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் மற்றும் சென்னை (அடையாறு). ஆதிதிராவிடர் நலத்துறையிலிருந்து பெறப்பட்டு புனரமைக்கப்பட்ட விடுதிகள் - திருச்சி, கோயம்பத்தூர் மற்றம் சென்னை (அயனம்பாக்கம்). மேலும் தற்பொழுது புனரமைப்பு பணிகள் நடைபெறும் விடுதிகள் - திருப்பூர், திருவள்ளுர், மதுரை, கோயம்புத்தூர், புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி. 2024 - 2025 புதிய தோழி விடுதிகள் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை.
போக்ஸோ வழக்குகள் - 2021 முதல் 2024 வரை 18518 வழக்குகள் பதியப்பட்டது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. போக்ஸோ வழக்கில் பாதிக்கப்பட்டுள்ள 4300 நபர்களுக்கு ரூ.84 கோடியே 97 லட்சத்தி 95 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.
திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ் 2021 - 2024 ஆம் ஆண்டில் தங்க நாணயம் நிதியுதவி வழங்கும் வகையில் ரூ.1013.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 1,26,647 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2024- 2025ஆம் ஆண்டு தங்க நாணயம் (ரூ.48.00 கோடி) மற்றும் நிதியுதவி (ரூ.50.15) வழங்கும் வகையில் ரூ.98.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 8000 பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியம் மூலம் சுயதொழில் மானியமாக 2021ம் ஆண்டு முதல் 2023-2024ம் ஆண்டு வரை 617 நபர்களுக்கு ரூ.50,000 வீதம் ரூ. 3 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கையருக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. தற்போது மார்ச் 2023 முதல் ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 15.09.2022 முதல் 1968 பள்ளிகளில் 1,60,428 குழந்தைகளுக்கு முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்டது. இதுவரை காலை உணவு திட்டம் விரிவாக்கத்தில் 31,008 பள்ளிகளில் 15.75 லட்சம் மாணவ மாணவியர்கள் பயனடைந்துள்ளனர். மேலும் இத்திட்டம் அனைத்து கிராமங்களில் உள்ள அரசு (ம) அரசு உதவிபெறும் 31,008 பள்ளிகளில் 15.75 லட்சம் மாணவ மாணவிகள் பயன்பட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரை, கடந்த 3 ஆண்டுகளாக தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் மூலம் தூத்துக்குடி மாநகரட்சி பகுதிகளில் மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து மழைநீர் வடிகால், பேவர் பிளாக் சாலைகள், சிறுபாலங்கள், அங்கன்வாடி மையங்கள், டுநுனு மின் விளக்குகள், பொது சிறுநீர் கழிப்பிடக் கட்டிடம், மோட்டார் பம்பு அறை, சாலைகள் மற்றும் பேருந்து நிழற்குடைகள் ஆகிய 76 பணிகள் 9 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2024-25-ல் 3 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீர் வடிகால், பேவர் பிளாக் சாலைகள், சேம்பர்கள், சிறுபாலங்கள், மற்றும் தார் சாலைகள் ஆகியவைகளுக்கு 31 பணிகள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. கடந்த 3 ஆண்டுகளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு தமிழ்நாடு அரசு நிதி மூலம் 1440 பணிகளுக்கு ரூ.420 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மழைநீர் வடிகால், குடிநீர் பணிகள், திடக்கழிவு பணிகள, பொதுக் கழிப்பிடம் மற்றும் சமுதாய கழிப்பிடம், நகர் நல மையங்கள், பள்ளிக் கட்டிடம் மேம்பாடு செய்தல், சாலைப் பணிகள் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிப் பணிகள் நடைபெற்று வருகிறது. 2024-25க்கு 88 பணிகளுக்கு ரூ.51.66 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பல்நோக்கு மருத்துவமனை கட்டிடம் 110 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. அதில் இருதய சிகிக்சை பிரிவு, நரம்பியல் பிரிவு, சிறுநீரக பிரிவு, குடல் மற்றும் ஈரல் சிகிக்சை பிரிவு மற்றும் அறுவை சிகிக்சை பிரிவு ஆகிய பிரிவுகள் அமைய உள்ளது.
மினி டைடல் பார்க் 30 கோடி மதிப்பீட்டில் நான்கு அடுக்கு மாடி கட்டிடப் பணி முடியும் தருவாயில் உள்ளது. இதன் மூலம் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும். விரைவில் முதலமைச்சர் தளபதியார் அவர்களால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. வின்பாஸ்ட் மின் கார் உற்பத்தி நிறுவனம் தொடங்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ரூ.930 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உப்பாத்து ஓடையில் தனியார் பங்களிப்புடன் தூர் வாரப்பட்டு 21 இடங்களில் இருந்த உடைப்புகளை சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் வடிகால் மடை 4 மற்றும் 5 தூர்வாரப்பட்டுள்ளது. வடிகாலை அடைத்து வைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததை அகற்றப்பட்டுள்ளன. வெள்ளநீர் எளிதாக கடலை சென்று அடைய பக்கிள் ஓடை அத்தனை சேனல்களும் தூர்வாரப்பட்டுள்ளது. அனைத்து தெருக்களிலும் உள்ள கழிவு நீர்கள் வெளியேற அனைத்து வடிகால்களும் தூர்வாரப்பட்டுள்ளது.
கோவில்பட்டியில் லிங்கம்பட்டி தொழிற்பேட்டை மற்றும் கடம்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சங்கராபேரி தொழிற்பேட்டைக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
சுற்றுலாத்துறை மூலம் தூத்துக்குடி தொகுதிகடல்சார் விளையாட்டு மையம் அமைத்திட ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அருள்மிகு வைகுண்டபதி பெருமாள் திருக்கோவில், சந்தனமாரியம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்தார்.