» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்து!
செவ்வாய் 1, அக்டோபர் 2024 11:12:01 AM (IST)
தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் துணை முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதன் மூலம் தமிழகத்தின் மூன்றாவது துணை முதல்வராக அவர் பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், கட்சி நிர்வாகிகள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தேசிய தலைவர்களும் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், கட்சி நிர்வாகிகள் பலரும் சென்னைக்கு நேரடியாக வந்து உதயநிதிக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர். இந்நிலையில், துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவருக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழத்துகள் வந்து குவிந்து வருகிறது.