» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் : 4 இளம்பெண்கள் மீட்பு
திங்கள் 30, செப்டம்பர் 2024 9:10:40 AM (IST)
தூத்துக்குடியில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 4 இளம்பெண்களை போலீசார் மீட்டனர்.
தூத்துக்குடியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடந்து வருவதாக மாவட்ட போலீஸ் எஸ்பி ஆல்பர்ட் ஜானுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. குறிப்பிட்ட மசாஜ் சென்டரில் சோதனை நடத்த தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி தலைமையிலான போலீசார் தூத்துக்குடியில் உள்ள குறிப்பிட்ட ஒரு மசாஜ் சென்டரில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அங்கு இருந்த 4 இளம்பெண்களை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மசாஜ் சென்டர் உரிமையாளர், மேலாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து மசாஜ் சென்டர்களையும் அந்தந்த பகுதி போலீசார் கண்காணிக்க எஸ்பி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
naan thaanOct 1, 2024 - 11:51:08 AM | Posted IP 172.7*****
antha masag centrekum peru illa,
athida owner kum peru illa,,,
manager kum peru illa... actual ah intha visayathula mama velai yaru paakuran nu theriyala...
மேலும் தொடரும் செய்திகள்

தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் சீரமைப்பு பணிகள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வெள்ளி 21, மார்ச் 2025 12:46:49 PM (IST)

மார்ச் 24ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
வெள்ளி 21, மார்ச் 2025 12:21:41 PM (IST)

கன்னியாகுமரி - சார்லபள்ளி கோடைகால சிறப்பு ரயில்கள்: முன்பதிவு நாளை தொடங்குகிறது!
வியாழன் 20, மார்ச் 2025 5:26:26 PM (IST)

தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி : கன்னியாகுமரியில் பரபரப்பு
வியாழன் 20, மார்ச் 2025 11:17:44 AM (IST)

கிருஷ்ணன்கோவில் நியாயவிலைக்கடையில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா திடீர் ஆய்வு
புதன் 19, மார்ச் 2025 5:07:27 PM (IST)

வேலைவாய்ப்புகளை பெருக்க தவறிய மத்திய அரசு: பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி பேச்சு
புதன் 19, மார்ச் 2025 4:14:06 PM (IST)

இதுOct 2, 2024 - 10:49:30 AM | Posted IP 172.7*****