» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : ஆட்சியர் நல உதவிகள் வழங்கினார்!

சனி 28, செப்டம்பர் 2024 12:43:59 PM (IST)



குமரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகளை ஆட்சியர் ஆர்.அழகுமீனா வழங்கினார். 

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தலைமையில், சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளின் மனுக்களை பெற்றுக்கொண்டு தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தன்நம்பிக்கையுடன் தங்களது வாழ்வினை எதிர்கொள்ளும் வகையில் அவர்களுக்கென கல்வி உதவித்தொகை, திருமண உதவி திட்டங்கள், இலவச பேருந்து பயண அட்டை, மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகள், செயற்கை கால்கள், தையல் இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, காதொலி கருவி, திறன்பேசி, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் நடைபெற்ற சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பெருமளவில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை, இலவச வீடு, இலவச வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அளித்தார்கள். கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, 3 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு ரூ.19,440 மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாரதி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்புலெட்சுமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜெரிபா ஜி இம்மானுவேல், உதவி இயக்குநர் திறன்மேம்பாடு உதவி இயக்குநர் (திறன்மேம்பாடு) லட்சுமிகாந்தன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செல்வராஜ், பயனாளிகள், மாற்றுத்திறனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory