» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி கைது: கீழே விழுந்து வலது கை எலும்பு முறிவு
திங்கள் 20, மே 2024 10:03:38 AM (IST)
தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி கைது செய்யப்பட்டார். தப்பிச் செல்ல முயன்றபோது கீழே விழுந்து அவரது வலது கை எலும்பு முறிவு ஏற்பட்டது.
தூத்துக்குடி குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்த ஜெபதுரை மகன் மாரிக்குமார் (33) என்பவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு கடையின் சரக்கு வாகனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று சரக்கு வாகனத்தில் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பீங்கான் ஆபீஸ் ஜங்ஷன் அருகில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து, தாக்கி அவரிடமிருந்த பணத்தை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து மேற்படி மாரிக்குமார் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி உத்தரவின்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையில் சார்பு ஆய்வாளர் ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல்ராஜ் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் மேல சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெனோரஸ் மகன் காத்தான் என்ற கார்லின் (24) தனது கூட்டாளியுடன் சேர்ந்து மாரிக்குமாரை தாக்கிவிட்டு, அவரிடமிருந்த ரொக்க பணம் ரூ.9,400ஐ பறித்துச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் உடனடியாக 24 மணிநேரத்தில் கார்லினை கைது செய்து, அவரிடமிருந்த பணம் 3160யும் பறிமுதல் செய்தனர். பின் அவரிடம் விசாரணை மேற்கொண்டத்தில் மேற்படி பணப்பறிப்பில் ஈடுபட்டதும், அதன் பிறகு யாரிடமும் சிக்கிக்கொள்ளாமல் தப்பிக்க தங்களது இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றபோது சாலையிலிருந்த வேகத்தடையில் தடுமாறி சறுக்கி கீழே விழுந்ததில் அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதும் தெரியவந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாகர் மித்ரா திட்டத்தில் காலிப் பணியிடங்கள் நியமனம் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
சனி 19, ஜூலை 2025 11:55:09 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்: இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!
சனி 19, ஜூலை 2025 11:38:27 AM (IST)

பேச்சிப்பாறை அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் : ஆட்சியர் திறந்து வைத்தார்!
வெள்ளி 18, ஜூலை 2025 5:27:44 PM (IST)

நாகர்கோவிலில் ஆசிரியர்கள் சாலை மறியல்: பெண்கள் உட்பட100க்கும் மேற்பட்டோர் கைது
வெள்ளி 18, ஜூலை 2025 4:04:20 PM (IST)

பிரதமர் வருகை: சோழமண்டலத்தில் இருந்து ரயில் வருமா? எதிர்பார்ப்பில் குமரி பயணிகள்!
வியாழன் 17, ஜூலை 2025 5:16:18 PM (IST)

பொருட்காட்சியில் நைட்டி அணிந்து குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்: 7பேர் மீது வழக்குப் பதிவு
வியாழன் 17, ஜூலை 2025 5:02:12 PM (IST)
