» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பொங்கி வெளியேறும் பாதாள சாக்கடை கழிவு நீர் : தூத்துக்குடியில் சுகாதார சீர்கேடு!

சனி 18, மே 2024 8:05:03 PM (IST)தூத்துக்குடியில் பாதாள சாக்கடை கழிவு நீர் சாலையில் வெளியேறி தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. 

தூத்துக்குடி மாநகராட்சி சுந்தரவேல்புரம் 7வது தெரு பகுதியில்  பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் வெளியேறுகிறது. அதன் காரணமாக கழிவு நீர் சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து

வேடிக்கை மக்கள்மே 19, 2024 - 11:08:37 AM | Posted IP 162.1*****

இது எல்லாம் DEMO தான் , மலை காலம் வந்தவுடன் மலம் கலந்த கழிவுநீர் பொங்கி ஆறு போல் ஓடும், மாநகராட்சி எப்படி செமையா செப்டிக் ஆறு அமைசிட்டாங்க பார்த்தீங்களா..

Kumarமே 19, 2024 - 08:19:19 AM | Posted IP 162.1*****

தூத்துக்குடி சிவந்தாகுளம் சாலையில் உள்ள சாக்கடை நீர் மழை பெய்த உடன் சாலையை கடந்து எதிர்திசையில் உள்ள ஒடைக்கு செல்கிறது இடம் அபிநயா திருமண மண்டபத்திற்கு எதிரில் அருகில் பள்ளி மற்றும் ஆரம்பசுகாதர நிலையம் உள்ளது

ஏரியா காரன்மே 18, 2024 - 08:46:08 PM | Posted IP 162.1*****

சில இடத்திலும் அதே தான். இனி கொஞ்ச நாள்ல ஊர் பூரா பரவி விடும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory