» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி மாவட்டத்துக்கு மே 18ம் தேதி கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை

வியாழன் 16, மே 2024 10:18:46 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் 18ஆம் தேதி கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியா் கோ. லட்சுமிபதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் 17ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கனமழை எச்சரிக்கையும், 18ஆம் தேதி மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையும், 19ஆம் தேதி கனமழை எச்சரிக்கையும் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மின்சாதன பொருள்களை கவனமாக கையாள வேண்டும். மேலும் மருதூா், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூா் முதல் புன்னக்காயல் வரை தாமிபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லவோ வேண்டாம்.

எனவே பொதுமக்கள் தகுந்த முன் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், மழை நேரங்களில் மரங்கள், மின்கம்பங்கள், நீா் நிலைகள் ஆகியவற்றின் அருகில் செல்லவேண்டாம் என்று ஆட்சியா் கோ. லட்சுமிபதி தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

வேல் சங்கர்மே 18, 2024 - 10:20:27 PM | Posted IP 162.1*****

அடிக்கடி நீர் நிலைகளின் அளவை கண்காணிக்க வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory