» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள 40 பண்டல் பீடி இலை பறிமுதல்
சனி 12, ஆகஸ்ட் 2023 10:51:59 AM (IST)
கன்னியாகுமரியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள பீடி இலை பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நெல்லை மாவட்டம் கூட்டப்புளி கடற்கரை பகுதியில் உள்ள சோதனை சாவடியில் இன்று அதிகாலை அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வந்த ஒரு டெம்போவை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அந்த டெம்போ அங்கு நிற்காமல் மின்னல் வேகத்தில் தப்பி சென்றது. இது தொடர்ந்து பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கடலூர் பாதுகாப்பு குழும போலீசார் ஜீப் மூலம் அந்த டெம்போவை சினிமா பாணியில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று கன்னியாகுமரி அருகே உள்ள சங்கம்தேரி பகுதியில் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
அதற்குள் அந்த டெம்போவில் இருந்து டிரைவர் குதித்து தப்பி ஓடி விட்டார். அந்த டெம்போவை போலீசார் சோதனை செய்து பார்த்தபோது அதில் 40 பண்டல் பீடி இலை கட்டு இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. ஒவ்வொரு பண்டலும் 35 கிலோ வீதம் மொத்தம் 1400 கிலோ பீடி இலை இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து டெம்போவுடன் அந்த பீடி இலையை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் கன்னியாகுமரி கடற்கரையில் இருந்து கடல் வழியாக படகு மூலம் இலங்கைக்கு இந்த பீடிஇலை பண்டலை கடத்தி சொண்டு செல்வதற்காக டெம்போவில் கடத்திக் கொண்டு செல்லப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சினிமா போல் போலீசார் துரத்திச் சென்று இந்த டெம்போவை மடக்கி பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொசு மருந்து தெளிப்போம்; மலேரியாவை ஒழிப்போம் : சுகாதாரத்துறை வேண்டுகோள்
திங்கள் 23, ஜூன் 2025 5:15:09 PM (IST)

ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் தகவல்
திங்கள் 23, ஜூன் 2025 12:09:22 PM (IST)

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 2½ பவுன் செயின் பறிப்பு : மர்ம நபர் கைவரிசை!
திங்கள் 23, ஜூன் 2025 11:25:36 AM (IST)

ஈரான், இஸ்ரேலில் சிக்கியுள்ள குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: மத்திய அரசுக்கு விஜய் வசந்த் கடிதம்!
ஞாயிறு 22, ஜூன் 2025 12:10:56 PM (IST)

மாத்தூர் தொட்டிப்பாலத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா ஆய்வு
வெள்ளி 20, ஜூன் 2025 5:37:39 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய கோரிக்கை!
வெள்ளி 20, ஜூன் 2025 3:21:15 PM (IST)
