» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நிலத்தடி நீர் உப்பு நீராக மாறும் அபாயம்

வெள்ளி 3, பிப்ரவரி 2023 8:51:06 PM (IST)



மேல்மாந்தை பகுதியில் உப்பளங்கள் அமைப்பதற்காக பனைமரங்கள் வெட்டி வீழ்த்தப்படுவதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

மேல்மாந்தை அருகில் உப்பளம் அமைப்பதற்காக நிலங்களை ஆக்ரமித்து பனைமரங்கள் வெட்டப்படுவதால் இரண்டு கிராமங்கள் அழிவுப்பாதையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்துள்ள மேல்மாந்தை அதன் அருகில் உள்ள செவல் என இரண்டு கிராமங்களில் சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்ட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் என்பது நெல் மிளகாய் விவசாயம் அதனை தொடர்ந்து பனை மற்றும் பனை சார்ந்த தொழிலை நம்பியே வாழ்ந்துவருகின்றனர். இந்நிலையில் மேல்மாந்தை பகுதியின் தென்பகுதியில் விவசாய நிலங்களை அழித்தும் பனைமரங்களை வெட்டியும் உப்பளம் அமைக்க இருப்பதாக தெரியவருகிறது.

சுமார் 50 முதல் 100 ஏக்கர் வரையிலான இடத்தை ஆக்கிரமித்து வருகின்றனர் ஏற்கனவே தூக்குக்குடி முதல் வேம்பார் வரை பல இடங்களில் உப்பளங்கள் செயல்படுவதால் மேலும் ஆபத்து ஏற்படும் என பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். விளைநிலங்கள் சேதப்படுத்தப்படுவதாலும் நூற்றுக்கணக்கான பனைமரங்களை வெட்டுவதாலும் விவசாய தொழில் பாதிக்கப்படுவதோடு குடிநீர் ஆதாரமும் முற்றிலுமாய் அழிந்துபோகும்.

மேலும் கால்நடைகள் பாதிக்கப்படுவதோடு உயிரிழக்கும் சூழல் அல்லது கால்நடையே இல்லாத சூழ்நிலை ஏற்படும். இதனையடுத்து இரண்டு கிராம மக்களின் வாழ்வாதாரம் கால்நடைகளின் பாக்காப்பு குடிநீர் தேவை இவற்றை கருத்தில் கொண்டு இரண்டு கிராம மக்கள் சார்பாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சபாபதி பனை மரங்கள் வெட்டுவதை நிறுத்த வேண்டும் விவசாய நிலங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என விளாத்திகுளம் வட்டாட்சியர் சசிகுமார் அவர்களிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

ஆக்கிரமிப்பை தடுத்து மரங்கள் வெட்டுவதை நிறுத்தாவிட்டால் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுடன் இணைந்து முற்றுகை போராட்டம் நடைபெறும் என முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சபாபதி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

MauroofFeb 6, 2023 - 12:49:34 PM | Posted IP 162.1*****

\விவசாயம்// என்ற பெயரில் பின்னூட்டமிட்டுள்ள நண்பருக்கு. உங்களது நம்பிக்கை மிக ஆழமானது. இதை தவிர்த்து வேறு ஏதேனும் கூறினால் வசைபாடுவீர்கள் என்பதால் தவிர்க்கிறேன்.

விவசாயம்Feb 4, 2023 - 09:22:16 PM | Posted IP 162.1*****

நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் தான் எல்லா விவசாயமும் செழிப்புடன் இருக்கும்.

செந்தூர் பாண்டி SFeb 4, 2023 - 12:05:45 PM | Posted IP 162.1*****

நல்ல முயற்சி. விளை நிலங்கள் காக்க பட வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory