» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அமிர்தா பொறியியல் கல்லூரி முதல்வருக்கு விருது

வியாழன் 2, பிப்ரவரி 2023 11:42:55 AM (IST)

நாகர்கோவில் அமிர்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் த. கண்ணன், சிறந்த பொறியியல் கல்லூரி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

நாகர்கோவிலில் உள்ள அமிர்தா கல்வி நிறுவனங்களின் கல்விசார் இயக்குநரும், அமிர்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வருமான த. கண்ணன், தேசிய அளவிலான கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் கொண்ட குழுவினரால் பொறியியல் பிரிவில் ஆராய்ச்சி மற்றும் கல்வியில் பங்களிப்புகளின் அடிப்படையில் சிறந்த பொறியியல் கல்லூரி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

சிறந்த பொறியியல் கல்லூரி முதல்வராக தேர்வு செய்யப்பட்டமையை சிறப்பிக்கும் வகையில் "ஆய்வு முறை மூலம் துரிதமான செயல்கற்றல்'' என்ற தேசிய அளவிலான கல்லூரி ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டத்தினை நடத்திய இந்திய மேலாண்மை கல்லூரிகளின் சங்கமும், (அசோசியேஷன் ஆஃப் இந்தியன் மேனேஜ்மென்ட் ஸ்கூல்ஸ்), அகில இந்திய மேலாண்மை சங்கம் (ஆல் இந்தியா மேனேஜ்மென்ட் அசோசியேஷன்), மற்றும் இந்திய ஆராய்ச்சி மையமும் (இந்தியன் கேஸ் ரிசர்ச் சென்டர்), மற்றும் ஃபயர்பேர்ட் மேலாண்மை ஆராய்ச்சி நிறுவனமும் (ஃபயர்பேர்ட் ஆஃப் ரிசர்ச் இன் மேனேஜ்மென்ட்) இணைந்து சிறந்த பொறியியல் கல்லூரி முதல்வருக்கான விருதினை வழங்கி சிறப்பித்தது.

சிறந்த பொறியியல் கல்லூரி முதல்வருக்கான விருதினைப் பெற்ற கல்விசார் இயக்குநரும், முதல்வருமான த. கண்ணன் அவர்களை கல்லூரி நிர்வாகம் மற்றும் நிர்வாக மேலாளர் பிரபாகரன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள் அனைவரும் பாராட்டி சிறப்பித்தார்கள். 


மக்கள் கருத்து

arumaiFeb 2, 2023 - 02:12:29 PM | Posted IP 162.1*****

arumai

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory