» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடடம் : அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்!

புதன் 1, பிப்ரவரி 2023 5:11:25 PM (IST)



ஈத்தவிளை அரசு தொடக்க பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடத்தினை அமைச்சர் த.மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தவிளை அரசு தொடக்க பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடத்தினை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் திறந்து வைத்து, தெரிவிக்கையில்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு உயர்ந்த கல்வியினை தர வேண்டுமென்ற உயரிய நோக்கில், பள்ளிகளை மேம்படுத்துதல், புதிய கட்டிடங்களை கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதனடிப்படையில், கோதநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட ஈத்தவிளை பகுதி பொதுமக்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களின் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.15 இலட்சம் மதிப்பில் ஈத்தவிளை அரசு தொடக்க பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடத்தினை திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள், பெற்றோர்கள் தங்களது முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், கோதநல்லூர் பேரூராட்சி தலைவர் மு.கிறிஸ்டல் பிறேமகுமாரி, செயல் அலுவலர் க.மகேஷ்வரி (கோதநல்லூர்), துணைத் தலைவர் ஆர்.எஸ்.டேவிட் (கோதநல்லூர்), கோதநல்லூர் பேரூராட்சி உறுப்பினர்கள் ஸ்டான்லி ஸ்டீபன், மேரி கலா, சுனிதா, அஜிதா, மஞ்சு, ஈத்தவிளை அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பா.தவசு, அருளானந்த ஜார்ஜ், இராஜேந்திர தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory