» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மத பிரசாரத்தில் ஈடுபட்டதாக ஆசிரியர் மீது தாக்குதல் : 3பேர் மீது வழக்குப் பதிவு

வியாழன் 6, அக்டோபர் 2022 11:45:21 AM (IST)

தூத்துக்குடி அருகே  கிறிஸ்தவ மத பிரசாரத்தில் ஈடுபட்டதாக ஆசிரியரை தாக்கிய 3பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி அருகே உள்ள கூட்டாம்புளி மேலத் தெருவைச் சேர்ந்தவர் பட்டுராஜ் மகன் ஆசீர்வாதம் ஞானதுரை (33). இவர் மங்கலகிரியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று செபத்தையாபுரம் பகுதியில் பைபிள் வாசகங்கள் அடங்கிய புத்தகங்களை வீடு வீடாக கொடுத்துக் கிறிஸ்தவ மத பிரசாரத்தில் ஈடுபட்டராம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அவரை தாக்கினார்களாம். 

இதில் காயம் அடைந்த ஆசிரியர் ஆசீர்வாதம்  ஞானதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேலும் அவர் சாயர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், செபத்தையாபுரத்தைச் சேர்ந்த சுகிர்தராஜ் மகன் ஹரிஹரசுதன் (32),  சிவமுருகன் மகன் ஜெய்சீலன் (52), கோபால் மகன் மாதவன் (54) ஆகிய 3பேர் மீது போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் துரைகுமார் வழக்குப் பதிந்து அவர்களை தேடி வருகிறார். இந்த சம்பவம் அந்த  பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து

PeterOct 8, 2022 - 02:07:47 PM | Posted IP 162.1*****

Christian is not a religion and we are not prpaganda Christianity. It is just a change in heart to accept Juses Christ is svaviour of our life to bring us in to paradise. At any cost we have to tell this poeple who do not know about this kingdom of Gospel. We will not ask them to come to Church or change name. As per Bible we have to prclaime Juesus Christ this is the duty of every man who is following Christ and his teachings. This is the preveliage of every Individual in India as per our constitution.

FrankOct 7, 2022 - 11:53:28 AM | Posted IP 162.1*****

மதத்தை பரப்புவதாக சொல்லி இவ்வாறு வீடு வீடாக செல்வது தவறு. உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் சேர்த்து இறைவனிடத்தில் கருணையுடன் வேண்டி கொள்ளுங்கள். (அவரவர் ஆலயங்களில் இருந்து)

Agastinமே 30, 1665 - 12:30:00 AM | Posted IP 162.1*****

Let our people share the message of Justice, compassion with clergies, bishop, elected representatives. Then our institutions will radiate Christ's love. Let non Christians come to us by our good deeds.

Agastinமே 13, 1665 - 05:30:00 AM | Posted IP 162.1*****

Let people show the love of Christ in action. Let the teacher withdraw the complaint and show them Jesus.

DineshOct 6, 2022 - 02:39:47 PM | Posted IP 162.1*****

மத பிரச்சாரம் இருக்கட்டும் கிறிஸ்தவ புனிதமான வேதாகமத்தை கிழித்தது தவறு இதை வன்மையாக கண்டிக்கிறோம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory