» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஸ்பிக் நிறுவனம் சார்பில் நீர்வரத்து ஓடை சீரமைப்பு பணி தொடங்கியது

புதன் 5, அக்டோபர் 2022 4:33:35 PM (IST)



தூத்துக்குடியில்  ஸ்பிக் நிறுவனம் சார்பில் நீர்வரத்து ஓடை சீரமைப்பு பணிகள் இன்று தொடங்கியது.

தூத்துக்குடி, முள்ளக்காடு, முத்தையாபுரம், அத்திமரப்பட்டி விவசாய சங்கத்தினர் ஸ்பிக் நிறுவனத்திடம் மழைக்காலத்திற்கு முன் வாய்க்காலை தூர்வாரி தருமாறு கோரிக்கை வைத்தனர். அதன்படி, விவசாய சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, உடனடியாக வாய்க்காலை தூர்வாரி தருவதற்கு ஸ்பிக் நிறுவனத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ஸ்பிக் நிறுவன துணைத் தலைவர் கே.கோபால கிருஷ்ணன் உத்தரவின் பேரில், இன்று காலை முதல் ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரும் பணி தொடங்கியது. 

இந்நிகழ்ச்சியில் ஸ்பிக் நிறுவன நிர்வாக முதுநிலை மேலாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் மக்கள் தொடர்பு துணை மேலாளர் எம்ஜே அம்ரிதா கௌரி, மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.குணசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், விவசாய சங்கத்தின் சார்பில் முள்ளக்காடு, முத்தையாபுரம், அத்திமரப்பட்டி விவசாய சங்கத் தலைவர்  திருமால், செயலாளர் ரகுபதி சின்னராஜா, நிர்வாகி  கிருபானந்தம் மற்றும் உப்பாற்று ஓடை ஒருங்கிணைப்பாளர் ரா.ஜோதிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்பணி தொடர்ந்து 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது.


மக்கள் கருத்து

போதுஜனம்Oct 5, 2022 - 04:51:56 PM | Posted IP 162.1*****

இதற்காக தொடர்ந்து போராடிவரும் அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory