» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

போலி காரணங்கள் கூறி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

வியாழன் 29, செப்டம்பர் 2022 12:47:54 PM (IST)

போலி காரணங்கள் கூறி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். 

தமிழகம் முழுவதும் சுமார் 50 இடங்களில் வருகிற அக்டோபர் 2ம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணி ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் பேரணி நடத்த அனுமதி வழங்கியது. ஆனால் தமிழக காவல்துறை பேரணியை நடத்துவதற்கு அனுமதி மறுத்துள்ளது. 

தமிழகத்தில் நிகழும் சட்டம் ஒழுங்கும் பிரச்சனை காரணமாக மத அடிப்படையிலாக நடைபெறக்கூடிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறுகிறது. இந்த சூழலில் ஆர்.எஸ். எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கினால், அது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும். என்பதற்காக காவல் துறை பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளது. 

இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீண்டும் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், "ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடந்தால் பிரச்சனை ஏற்படும் என்ற போலி காரணங்கள் கூறி ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது, மேல் மறையீடு செய்திருப்பது முறையான ஒன்று. அதற்கு நீதி கிடைக்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்" என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்


மக்கள் கருத்து

ஆனந்தன்Sep 29, 2022 - 03:54:36 PM | Posted IP 162.1*****

இராதாகிருஷ்ணன் நல்லவர் ஆனால் தவறான இடத்தில் இருக்கிரார்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory