» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மணல் திட்டில் சிக்கிய விசைப்படகு : மீனவர்கள் போராடி மீட்டனர்

சனி 6, ஆகஸ்ட் 2022 4:38:43 PM (IST)



தேங்காப்பட்டணத்தில் மணல் திட்டில் சிக்கிய விசைப்படகை மீனவர்கள் நீண்ட நேரம் போராடி மீட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மதியம் தூத்தூர் பகுதியை சேர்ந்த டைட்டஸ் என்பவரது விசைப்படகில் 12 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டனர். அந்த படகு முகத்துவாரம் பகுதியில் சென்ற போது மணல் திட்டில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மீனவர்களால் அந்த படகை மேற்கொண்டு இயக்க முடியவில்லை. இதையடுத்து மீனவர்கள் படகை கயிறு கட்டி இழுத்து கரையோரம் ஒதுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

நீண்ட நேரம் போராடி படகை மீட்டு பாதுகாப்பான இடத்தில் ஒதுக்கி நிறுத்தினர். இதுதொடர்பாக மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆண்டனி கூறும்போது, தேங்காப்பட்டணம் துறைமுகம் முகத்துவார பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இதனால் மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு துறைமுக முகத்துவார பகுதியில் உள்ள மணல் திட்டுகளை அகற்றி சீரமைப்பு பணியை உடனே தொடங்க வேண்டும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory