» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் இன்று 5வது கடல் சீற்றம்: படகு சேவை ரத்து; சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை!

வியாழன் 19, மே 2022 4:31:41 PM (IST)



குமரியில் இன்று 5-வது நாளாக கடல் சீற்றம் காணப்படுவதால் படகு சேவை ரத்து செய்யப்பட்டது. கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. 

கன்னியாகுமரியில் இன்று அதிகாலையில் இருந்தே ஒருபுறம் கடல் நீர்மட்டம் "திடீர்"என்று தாழ்வானது. மறுபுறம் பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் இன்று காலை 8மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து இதுவரை தொடங்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து கடல் சீற்றம் மற்றும் கடல் நீர் மட்டம் தாழ்வு காரணமாக விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அதன் நுழைவாயிலில் அறிவிப்பு பலகை வைத்தது.

இதனால் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் நின்றபடியே விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு விட்டு சென்றனர். பலர் கடற் கரையில் இருந்தபடியே கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை செல்போன் மூலம் செல்பி எடுத்து சென்றனர். 

கன்னியாகுமரி, சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், வாவத்துறை, கீழமணக்குடி மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் ராட்சத அலைகள் கிளம்பி ஆக்ரோஷமாக வீசின. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்குஇந்த ராட்சத அலைகள் ஆக்ரோசமாக எழும்பி கரையை நோக்கி வந்து தொட்டுவிட்டுச்சென்றன.  ஒரு சில பகுதிகளில் கடல் நீர் மட்டம் தாழ்வாகி சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி காணப்பட்டது. இந்த கடல் சீற்றத்தினால் கன்னியாகுமரி கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory