» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திமுகவை இன்னும் 25 ஆண்டுகள் யாரும் அசைத்து பார்க்க முடியாது: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

வியாழன் 19, மே 2022 10:18:08 AM (IST)



திமுகவை இன்னும் 25 ஆண்டுகள் யாரும் அசைத்து பார்க்க முடியாது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார். 

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில் "முதலமைச்சர் 24 மணிநேரத்தில் 20 மணி நேரம் உழைக்கிறார். இந்துக்களின் விரோதி திமுக என பிஜேபி கூறுகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல கோவில்களில் அன்னதானம், கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதை கண்டு பிஜேபி, நடுங்கி ஒடுங்கி உள்ளது. 

மீனவர்கள், விவசாயிகள் நலனை காக்க பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுகிறது. ஒட்டப்பிடாரம் பகுதியில் தொழில் வளர்ச்சியை பெருக்கும் வகையில் பர்னிச்சர் பார்க் பூங்கா வரவுள்ளது. திமுக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியான பேரறிவாளன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய மாநில அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பியதை கிடப்பில் போட்டுவிட்டார். உச்சநீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது. ஆளுநர் மாநில அரசின் திட்டத்திற்கு கட்டுப்பட்டவர் என்று நீதிபதி கூறியுள்ளார். மற்றவர்கள் விடுதலையாவதற்கு முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.

திமுக சாதாரன இயக்கம் அல்ல அண்ணா இந்தி மொழி எதிர்ப்பு அரசியல் செய்து 1967ல் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைந்தது காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போது எமர்ஜன்சி சட்டத்தை எதிர்த்தது திமுக ஆட்சி இழந்தாலும் பரவாயில்லை என்று கலைஞர் ஸ்டாலின் கைது சிறையில் அடைப்பு என எல்லாவற்றையும் கடந்து வந்த தலைவர் தான் நம் முதல்வர் ஸ்டாலின். 2024ல் நடைபெறவுள்ள தேர்தலில் மதசார்பற்ற கட்சிகளை ஓருங்கிணைத்து தேசிய அளவில் தடம் பதிக்கவுள்ளார் முதல்வர். பிஜேபியை டெபாசிட் இழக்க பணி செய்வோம். 

மாப்பிள்ளையூரணியில் அடிப்படை பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவேறுவதற்கு கனிமொழி எம்.பி வழிகாட்டுதலோடு சண்முகையா எம்.எல்.ஏ சிறப்பாக பணியாற்றி வருகிறார். மழை காலத்தில் அவர் செய்த பணிகளை என்றும் மறக்க முடியாது. திமுகவை இன்னும் 25 ஆண்டுகள் யாரும் அசைத்து பார்க்க முடியாது என்றார்.

ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா பேசுகையில் "இப்பகுதியில் குடிதண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு ஓரு கோடியே 65 லட்சம் மதிப்பீல் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்ற வருகின்றன. எல்லா பணிகளையும் விரைவாக செய்திட வேண்டும் என்று முதல்வர் எங்களுக்கு உத்திரவிட்டுள்ளார். 505 வாக்குறுதிகளில் ஏறக்குறைய பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. விவசாயத்திற்கு தனிபட்ஜெட் முதல்வரின் சாதனை தொடரும்" என்றார்.

கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவரும் நகர கூட்டுறவு வங்கி தலைவருமான சரவணக்குமார் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய தலைவர் வசுமதி அம்பாசங்கர் முன்னிலை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் மாடசாமி வரவேற்புரையாற்றினார். மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார் ரூபன், பிரம்மசக்தி, மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், துணைச்செயலாளர்கள் முகமது அப்துல்காதர், செந்தூர்மணி, இளைஞர் அணி செயலாளர் ராமஜெயம், தொண்டரணி செயலாளர் வீரபாகு, சுற்றுச்சூழல் அணி செயலாளர் ரவி என்ற பொன்பாண்டி, மகளிர் அணி செயலாளர் ஜெசி பொன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

முட்டாள்மே 19, 2022 - 02:14:14 PM | Posted IP 162.1*****

முட்டாள் மக்கள்தான் குற்றவாளிகளை அழகு பார்த்து அமைச்சராக தேர்ந்தெடுப்பார்கள் .

டோனிமே 19, 2022 - 12:38:56 PM | Posted IP 162.1*****

மீனவர்க்கு வர வேண்டிய தடைகால ரூபாயை முதலில் போடுங்கள் ... அப்புறம் பேசுங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory