» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் ஏழை பெண்களுக்கு விலையில்லா ஆடுகள் : ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்

புதன் 18, மே 2022 3:57:58 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் ஏழ்மை நிலையில் உள்ள பெண்களுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா வெள்ளாடுகளை மாவட்ட ஆட்சியர்  கி.செந்தில்ராஜ், வழங்கினார்.

ஊரக ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள்/கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு 100% மானியத்தில் 5 வெள்ளாடுகள்/செம்மறியாடுகள் வழங்கி பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டத்தின் கீழ் 2021-2022 ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் {ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பெண் பயனாளிகள் வீதம்} 1200 பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.2.40 கோடி செலவில் 100% மானியத்தில் தலா 5 வெள்ளாடுகள் வீதம் 6000 வெள்ளாடுகள் வழங்கப்பட உள்ளது.

இன்று தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் தேர்வு செய்யப்பட்ட 82 ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள்/கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு 100% மானியத்தில் 5 வெள்ளாடுகள் வீதம் இலவசமாக மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மேலும் பயனாளிகளிடம் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியர் சிறந்த முறையில் அரசால் வழங்கப்பட்ட வெள்ளாடுகள் வளர்த்து ஆடுகளைப் பெருக்கி தொழில் முனைவோராக பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார். 

இத்திட்டத்தில் வழங்கப்பட்ட ஆடுகளுக்கு அரசால் இலவசமாக காப்பீடு செய்யப்பட்டுள்ளன என்றும் கொட்டகை கட்டும் வகைக்கு பயனாளிகள் ஒவ்வொருக்கும் ரூ.1000 வீதம் வழங்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். முன்னதாக பயனாளிகளுக்கு சிறந்த முறையில் ஆடுகளை வளர்க்க கால்நடை பராமரிப்புத்துறையால் பயிற்சி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், இணை இயக்குநர் கால்நடை  ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

Meenakshiமே 18, 2022 - 10:25:07 PM | Posted IP 162.1*****

ஐயா. நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன் ஐயா என் முகவரி 8/34மு முடுக்கு தெரு ஆத்தூர் தூத்துக்குடி மாவட்டம் ஐயா எனது கணவர்.27.062021. அன்று எனது கணவர் இறந்துவிட்டார் குரானா வால் இறந்துவிட்டார் எனது இரண்டு குழந்தைகளுடன் நான் மிகவும் வாழ்வாதாரம் இழந்து இருக்கின்றேன் ஐயா எனது கருணை அடிப்படையில் மீன்வளத் துறைக்கு அப்பளை பண்ணி இருந்தேன் தூத்துக்குடி ன்மீன்வளத்துறை ஏதோ ஒரு அரசு வேலை கருணை அடிப்படையில் கிடைத்தால் எனது இரண்டு குழந்தைகளை வளர்க்க உதவியாக இருக்கும்றை அதனாலயா இந்த மனு மீது கருணை அடிப்படையில் ஒரு வேலை வாங்கித் தர வேண்டும் என்று உங்களை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு எஸ் மீனாட்சி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory