» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சாலை விபத்து விழிப்புணர்வு பெருநடை ஓட்டம் : ஆட்சியர் அரவிந்த் துவக்கி வைத்தார்!

சனி 14, மே 2022 12:46:59 PM (IST)



குமரி மாவட்ட காவல்துறை சார்பில் சாலை விபத்து விழிப்புணர்விற்கான பெருநடை ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் சார்பில், சாலை விபத்தினை தவிர்ப்பது குறித்து, நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கிலிருந்து நடைபெற்ற விழிப்புணர்வு வாக்கத்தான் பெருநடை ஓட்ட பந்தயத்தினை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத், முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்திலிருந்து தொடங்கி டவர் சந்திப்பு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், கட்டபொம்மன் சந்திப்பு, நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், வாசன் கண் மருத்துவமனை, வடசேரி சந்திப்பு வழியாக மீண்டும் அண்ணா விளையாட்டரங்கம் வந்தடைந்தது. நிகழ்ச்சடியில் ஓட்டத்தில்முதலில் வந்த 50 நபர்களுக்கு பரிசுகள் வழங்கி, கௌரவிக்கப்பட்டது. ஓட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஜெ.டேவிட் டேனியல், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory