» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வு தொடங்கியது: 23,389 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்!

செவ்வாய் 10, மே 2022 12:35:23 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 85 மையங்களில் இன்று பிளஸ் 1 தேர்வு தொடங்கியது. 23,389 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரண மாக கடந்த 2 ஆண்டுகளாக பிளஸ்-1 தேர்வு நடைபெற வில்லை. இரண்டு ஆண்டு களுக்குப்பிறகு பிளஸ்-1 தேர்வு இன்று நடந்தது. குமரி மாவட்டத்தில் 85 மையங்களில் நடந்த தேர்வை  23 ஆயிரத்து 389பேர் எழுதினார்கள். தேர்வு இன்று தொடங்கி யதையடுத்து மாணவ-மாணவிகள் காலையிலேயே தேர்வு மையத்திற்கு வந்தனர். இன்று முதல் தேர்வு என்பதால் மாணவ-மாணவிகளை தனது பெற்றோர் தேர்வு மையத்திற்கு அழைத்து வந்திருந்தனர்.

தேர்வு மையத்திற்குள் சென்ற  மாணவர்களுக்கு ஆசிரி யர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் தங்க ளுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தில் அறைக் குள் சென்றனர். காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி யது. தேர்வு மையத்திற்குள் எலக்ட்ரானிக்கல் பொருட்கள் கொண்டு செல்வதற்கு தடை விதிக் கப்பட்டிருந்தது. தேர்வு மையத்தில் பணியில் ஈடு பட்டிருந்த ஆசிரியர்கள் செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

தேர்வு மையத்திற்குள் மாணவ-மாணவிகள் மற்றும் தேர்வு கண்காணிப்பு ஆசிரியர்களைத் தவிர மற்றவர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. தேர்வு மையத்திற்கு வெளியே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாகர்கோவில் தக்கலை குழித்துறை திருவட்டாறு கல்வி மாவட்டத்திலும் தேர்வை கண்காணிக்க 120 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருந்தது.

பறக்கும் படை அதிகா ரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி தலைமையில் பறக்கும் படை அதிகா ரிகள் சோதனை மேற்கொண் டனர். தேர்வு இன்று காலை தொடங்கியதை அடுத்து வினாத்தாள்கள் நான்கு கல்வி மாவட்ட அலுவ லகங்களில் இருந்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த தேர்வு மையங்க ளுக்கு கொண்டு செல்லப் பட்டு தேர்வுகள் நடந்தது. 

தேர்வு முடிந்த பிறகு விடைத்தாள்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே பிளஸ் 2 விடைத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் உள்ள மற்றொரு அறைகளில் பிளஸ் 1 விடைத்தாள்களையும் வைக்க ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. 

அதன்படி நாகர்கோவில் கல்வி மாவட்டத்திற்கான விடைத்தாள்கள் நாகர்கோவில் டதி பள்ளிக்கும், தக்கலை கல்விமாவட்டத்திற்கான விடைத்தாள்கள் தக்கலை அமலா கான்வென்ட் பள்ளிக்கும், குழித்துறை கல்வி மாவட்டத்திற்கான விடைத்தாள்கள் திருத்துவபுரம் புனித ஜோசப் கான்வென்ட் பள்ளிக்கும், திருவட்டார் கல்வி மாவட்டத்திற்கான விடைத்தாள்கள் படந்தாலு மூடு திரு இருதய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கும் கொண்டு செல்லப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. விடைத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory