» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நகைக்காக 4 வயது சிறுவன் கொடூர கொலை: கணவன்-மனைவி சிறையில் அடைப்பு!

செவ்வாய் 25, ஜனவரி 2022 11:25:22 AM (IST)

மணவாளக்குறிச்சி அருகே கொடூரமாக கொல்லப்பட்ட சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பாத்திமா தெருவை சேர்ந்தவர் சரோபின் (37). மீன்பிடி தொழிலாளி. அவரது மனைவி பாத்திமா (35). இந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். சரோபினுக்கு போதிய வருமானம் இல்லை. இதனால் குடும்பத்தை நடத்த கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இவருடைய மனைவி பாத்திமா, தெரிந்தவர்களிடம் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் மிகுந்த நெருக்கடிக்கு ஆளானார். கடன் கொடுத்தவர்கள் பாத்திமா வீட்டிற்கு வந்து சத்தமிட்டு செல்வது வழக்கமாம். 

இந்நிலையில் வாணியக்குடியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் கடன் வாங்கிய ரூ.60 ஆயிரத்தை திருப்பிக் கொடுக்க முடியாமல் பாத்திமா மிகுந்த நெருக்கடிக்கு ஆளானார். கடந்த 21-ந் தேதி கடனை அடைக்க வாணியக்குடியை சேர்ந்த பெண் அவருக்கு கெடு விதித்தார். இதனால் பாத்திமா கடன் பிரச்சினையை எதிர்கொள்ள முடியாமல் தவித்ததாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில்தான் பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஜான் ரிச்சர்டு, சகாயசில்ஜா (28) தம்பதியின் 4 வயது மகன் ஜோகன் ரிஷி அணிந்திருந்த நகை மீது பாத்திமாவின் பார்வை பதிந்தது. 

சிறுவனின் நகையை கொள்ளையடிக்க அவர் ஒரு வாரமாக முயற்சித்ததாக கூறப்படுகிறது. 21-ந் தேதி மதியம் வீட்டின் முன்பு விளையாடிய ஜோகன் ரிஷியை, பாத்திமா தன்னுடைய வீட்டுக்குள் அழைத்து சென்று நகையை பறித்ததோடு சிறுவனை கொடூரமாக கொன்று பீரோவில் பூட்டி வைத்தார். பின்னர் இந்த விவரத்தை அவர், தனது கணவர் சரோபினிடம் தெரிவித்துள்ளார். அவரும் மனைவியை காப்பாற்ற கொலையை மறைக்க திட்டமிட்டார். ஆனால் போலீஸ் விசாரணையில் அவர்கள் இருவரும் சிக்கினர். 

இதற்கிடையே சிறுவனின் உடல் நேற்று முன்தினம் பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் வந்த சிறுவனின் தந்தை ஜான் ரிச்சர்ட் கதறி அழுதார். நேற்று காலை 10 மணிக்கு சிறுவனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. சிறுவனின் உடலை பார்த்து தொடர்ந்து கதறி அழுததால் தாயார் சகாய சில்ஜா மயங்கி விழுந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

அனாதையான குழந்தைகள் 

முன்னதாக சிறுவன் கொலை வழக்கில் கைதான கணவன்-மனைவி இருவரும் இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பாத்திமா தக்கலை பெண்கள் சிறை சாலையிலும், சரோபின் குழித்துறை சிறைச் சாலையிலும் அடைக்கப்பட்டனர். இவர்களது 2 பிள்ளைகளையும் கவனிக்க யாரும் முன்வரவில்லை. இதனால் அனாதையான பிள்ளைகள் காப்பகத்தில் சேர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பெற்றோரின் இந்த தவறான செயல் பிள்ளைகள் காப்பகத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

adaminJan 28, 2022 - 07:38:07 AM | Posted IP 27.4.*****

enna kodumaiyana world ithu

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory