» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பிரபல நடிகையின் படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட்ட 2பேர் கைது!

புதன் 1, டிசம்பர் 2021 4:55:48 PM (IST)

பிரபல நடிகையின் மார்பிங் செய்த ஆபாச போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட குமரியைச் சேர்ந்த 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

மலையாள திரையுலகில் முன்னணி நடிகை பிரவீணா. தமிழ் டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவரது ஆபாச போட்டோக்கள் சில, இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் வெளியானது. இதை பார்த்து நடிகை பிரவீணா அதிர்ச்சி அடைந்தார். அந்த ஆபாச போட்டோக்களில் இருப்பது தொடர்புடைய நடிகையில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது. எனினும் அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலானதால், உடனடியாக கேரள ஏடிஜிபி மனோஜ் ஆபிரகாமிடம் பிரவீணாபுகார் அளித்தார். 

இந்த புகார் தொடர்பாக, திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் பல்ராம் குமார் உபாத்யாயா தலைமையில் ஒரு தனிப்படைக்கு உத்தரவிட்டார். விசாரணையில், பிரவீணாவின் போட்டோ ஆபாசமாக மார்பிங் செய்து பதிவிடுவதற்காகவே இன்ஸ்டாகிராமில் போலி ஐடி உருவாக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த ஐடி குறித்த தகவல்களை போலீசார் சேகரித்தனர். 

அப்போதுதான் குமரி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் சங்கர், பாக்கியராஜ் என்ற 2 பேரும் சிக்கினர். இதில் மணிகண்டன் சங்கரை நாகர்கோவிலில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஆனால், பாக்கியராஜ் அதற்குள் தலைமறைவானார். அவருக்கான தேடுதல் வேட்டை தீவிரமானதில், டெல்லி சாகர்பூர் பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து டெல்லி சென்ற கேரள போலீசார், சுற்றி வளைத்து அங்கு கைது செய்தனர். 2 பேரையும் நேற்று திருவனந்தபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory