» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஓல்எக்ஸ்-ல் வேலை தருவதாக போலி விளம்பரம் : நூதன மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது

வெள்ளி 26, நவம்பர் 2021 10:12:58 AM (IST)

குமரி மாவட்டத்தில் OLX இல் வேலை வாங்கி தருவதாக போலியாக விளம்பரம் செய்து பல்வேறு நபர்களை ஏமாற்றி பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

OLX மூலம் வேலைவாங்கி தருவதாக போலியாக விளம்பரம் செய்ததை நம்பி ஏமாந்து பணத்தை இழந்த பலர் தொடர்ச்சியாக சைபர்கிரைம் காவல்நிலையத்தில் தொடர்ச்சியாக புகார்கள் வந்துகொண்டிருந்தது.இது சம்பந்தமாக விசாரணை செய்து குற்றவாளியை கண்டுபிடிக்க குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ. பத்ரிநாராயணன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சைபர்கிரைம் ஏடிஎஸ்பி சுந்தரம் மேற்பார்வையில் ஆய்வாளர் வசந்தி புலன்விசாரணை மேற்கொண்டார். 

விசாரணயில் OLX இல் பல்வேறு பெயர்களில் வேலை வாங்கி தருவதாகஏமாற்றிய நபர் நடைக்காவு பகுதியை சார்ந்த நேசையன் மகன் சுரேஷ் (41) என்பது தெரியவந்தது. குற்றவாளியை தேடிவந்த நிலையில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் பலநபர்களை ஏமாற்றியதை ஒப்புக்கொண்டார்.இது தொடர்பாக குற்றவாளியின் வங்கி கணக்கு விபரங்களை வைத்து தொடர்ந்து விசாரணை நடைபெறும். ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடி சம்பந்தமாக சமூக வலைத்தளங்கள் மூலமாக தொடர்ச்சியாக மாவட்ட காவல்துறை சார்பில் பல சமயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் இதுபோன்று பணத்தை கொடுத்து ஏமாறுபவர்கள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory