» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கனிமொழி எம்பியுடன் திருமண்டல நிர்வாகிகள் சந்திப்பு

சனி 23, அக்டோபர் 2021 10:46:29 AM (IST)தூத்துக்குடி நாசரேத் திருமண்டல "லே" செயலர் கிப்சன் மற்றும் திருமண்டல நிர்வாகிகள், கனிமொழி எம்பியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் கடந்த 20-10-2021 அன்று இறுதி கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் "லே" செயலராக கிப்சன், திருமண்டல உப தலைவராக குருவானவர் தமிழ்ச்செல்வன், குருத்துவ காரியதரிசியாக இம்மானுவேல் வான்ஸ்டக், பொருளாளராக மோகன்ராஜ் அருமைநாயகம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்களையும், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 


மக்கள் கருத்து

JOSEPH KANAGARAJOct 25, 2021 - 09:35:41 AM | Posted IP 108.1*****

2006 முதல் 2011 வரை இருந்த திமுக ஆட்சி அப்போதைய மாவட்ட செயலாளர் பெரியசாமி தலையீட்டால் திருமண்டலம் நொறுங்கிப்போனது. இப்போது மீண்டும் அதே போன்றதொரு சூழல்

PrassanaOct 23, 2021 - 11:31:34 AM | Posted IP 162.1*****

திமுக கட்சியினர் திருமண்டல தேர்தலில் தலையிடுவது அவர்களுடைய வெற்றிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory