» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஸ்பிக் நிறுவனம் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம்: கனிமொழி எம்.பி., தொடங்கி வைத்தார்

வெள்ளி 22, அக்டோபர் 2021 8:22:13 PM (IST)ஸ்பிக் நிறுவனத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள மருத்துவ பயன்பாட்டிற்கான ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தின் சார்பில் மருத்துவ பயன்பாட்டிற்கான ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உற்பத்தி நிலையம் மூலம் மருத்துவ பயன்பாட்டிற்கான ஆக்ஸிஜன் நாள் ஒன்றுக்கு 170 சிலிண்டர் தயாரிக்கப்படுகிற‌து. உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜன் முழுவதும் தமிழ்நாடு அரசு மருத்துவத்துறைக்கு வழங்கப்படுகிறது. ஸ்பிக் ஆலை வளாகத்தில் அமைந்துள்ள உற்பத்தி நிலையத்தை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்தார். 

பின்னர், ஸ்பிக் ஆலையைச் சுற்றிப் பார்த்துவிட்டு, தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய கனிமொழி எம்.பி., கூறுகையில், தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் தமிழக வளர்ச்சிக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகிறது என்பதில் நான் மிக்க சந்தோஷம‌டைகிறேன். இந்த நிறுவனத்தில் இளைய தலைமுறையினரான ஆண்கள், பெண்கள் பணிபுரிவது கண்டு பெருமிதமாக உள்ளது என்றார்.இந்நிகழ்ச்சியில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஸ்பிக் முழு நேர இயக்குநர் எஸ்.ஆர். ராமகிருஷ்ணன், முதன்மை செயல் அதிகாரி இ.பாலு, துனைபொது மேலாளர் செந்தில் நாயகம், அமோனியா உற்பத்தி முதுநிலை மேலாளர் ஏ.எல்.சுப்பிரமணியன், முதுநிலை மேலாளர் ஜெயப்பிரகாஷ், மக்கள் தொடர்பு அதிகாரி அமிர்தகௌரி மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

K.GANESHAN sr pharmacist SPIC Rtd.Oct 22, 2021 - 09:55:28 PM | Posted IP 162.1*****

We are proud of our SPIC's continuous services to the community for the past 50 years. Long live Spic.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory