» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தேர்தலை ரத்து செய்ய பேராயருக்கு அதிகாரமில்லை: தூத்துக்குடியில் டிஎஸ்எப் அணியினர் பேட்டி

வெள்ளி 22, அக்டோபர் 2021 4:44:04 PM (IST)தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலை ரத்து செய்யும் அதிகாரம் பேராயருக்கு இல்லை என டிஎஸ்எப் அணியினர் தெரிவித்தனர். 

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் வெற்றிபெற்ற டி.எஸ்.எப் அணியினர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது உப தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட குருவானவர் தமிழ்ச்செல்வன் கூறும்போது "திருமண்டல தேர்தல் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக பேராயர் அறிவித்து இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது. இந்த அறிக்கையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. 

வழக்கமாக பேராயர் வெளியிடும் அறிக்கையில் நாள், இடம், கடிதம் எண் இடம்பெற்றிருக்கும். இதில் அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை. வலுக்கட்டாயமாக பேராயரை இந்த அறிக்கை வெளியிட வைத்திருக்கலாம் என்று கருதுகிறோம். மக்களின் ஆதரவோடு திருச்சபை நிர்வாகத்தை முறையாக கைப்பற்றி உள்ளோம். திருச்சபை சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவோம். மக்கள் எங்களை முறைப்படி தேர்வு செய்துள்ளார்கள் என்றார்.

அப்போது பேராயர் காணவில்லை என்று புகார் அளிக்க எதுவும் திட்டம் இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து பேசிய லே செயலாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், "இது எங்களது அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்கும். திருச்சபை தேர்தலை ரத்து செய்யும் அதிகாரம் பேராயருக்கு  இல்லை சினாட் மட்டும் மாடரேட்டர்கள் மட்டுமே இதனை அறிவிக்க முடியும். திருச்சபை நிர்வாகத்தின் விதிகளின்படி எங்களது செயல்பாடுகள் இருக்கும் என்றார். 


மக்கள் கருத்து

JOSEPH KANAGARAJOct 25, 2021 - 09:38:37 AM | Posted IP 108.1*****

உங்க நைனாவை பழைய பேராயர் ஜெபச்சந்திரன் ஓடவிட்டது உனக்கு நினைவில்லையா தம்பி? அப்போது பேராயருடன் இருந்து அந்த செயலை செய்தது இப்போது உங்க அணியில் உள்ள பொருளாளர் மோகன்ராஜ். உங்க நைனாவை பேராயர் டிஸ்மிஸ் செய்தார். இப்போ சொல்லு பேராயருக்கு அதிகாரம் இருக்கா இல்லையா? உங்க அணி எடுக்கும் எந்தஒரு முடிவையும் பேராயர் ஒப்புதல் வழங்கினால் மட்டுமே அமலுக்கு வரும் என்பது உனக்கு தெரியுமா தெரியாதா?

ArulOct 22, 2021 - 08:26:37 PM | Posted IP 162.1*****

Yes, real

RAJAOct 22, 2021 - 06:12:13 PM | Posted IP 162.1*****

SUPER

ThadeusOct 22, 2021 - 05:30:37 PM | Posted IP 162.1*****

Yes

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory