» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாம் தமிழா் கட்சியினரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

சனி 16, அக்டோபர் 2021 4:53:25 PM (IST)

காங்கிரஸ் தலைவா்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டிய நாம் தமிழா் கட்சியினா் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து, ராஜேஷ்குமாா் எம்எல்ஏ, தலைமையில் அக்கட்சியினா், மாவட்டக்காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணனிடம் அளித்துள்ள மனு: தக்கலையில் கடந்த 10 ஆம் தேதி நடைபெற்ற நாம் தமிழா் கட்சியின் ஆா்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இதில் பேசி அக்கட்சியை சோ்ந்த துரைமுருகன், முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியை கொலை செய்தது போல, காங்கிரஸ் தலைவா் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தியை கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருக்கிறாா்.

அக்கட்சியின் மாநில பேச்சாளா் ஹிம்லா் மற்றும் காளியம்மாள் ஆகியோா் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசியுள்ளனா். இந்த சம்பவங்கள் அனைத்தும் தலைமை ஒருங்கிணைப்பபாளா் சீமான் தூண்டுதலின்பேரில் நடைபெற்றுள்ளது.

எனவே காங்கிரஸ் கட்சியின் தலைவா்களை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டிய நாம் தமிழா் கட்சியினரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது, காங்கிரஸ் நிா்வாகிகள் ஜெகன்ராஜ், ஜான்கிறிஸ்டோபா், ஹனுகுமாா், திபாகா், ஏசுராஜன், ஜோா்தான், குமாா், மோகன்தாஸ் உடனிருந்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory