» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மீனவர்கள் 16ம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் : ஆட்சியர்

புதன் 13, அக்டோபர் 2021 5:39:08 PM (IST)

தெற்கு வங்காள விரிகுடா, குமரிக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால்  வருகிற 16ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிடட் செய்திக்குறிப்பு: 13.10.2021 அன்று தெற்கு வங்காள விரிகுடா, தென்கிழக்கு அரபிக்கடல், இலட்சத்தீவு, அந்தமான் கடற்பகுதி மற்றும் கேரள கடற்பகுதிகளில் 40-50 கி.மீ வேகம் வரை காற்று வீசுக்கூடும் எனவும், 14.10.2021 அன்று மன்னார் வளைகுடா, குமரி கடற்பகுதி, கேரள கடற்பகுதி, இலட்சத்தீவு மற்றும் மாலத்தீவு கடற்பகுதிகளில் 45-55 கி.மீ வேகம் வரை காற்று வீசுக்கூடும் எனவும், 

15.10.2021 மற்றும் 16.10.2021 ஆகிய இரண்டு நாட்களுக்கு தென்மேற்கு வங்காள விரிகுடா, குமரி கடற்பகுதி, மன்னார் வளைகுடா, தென்கிழக்கு அரபிக்கடல், இலட்சத்தீவு மற்றும் மாலத்தீவு கடற்பகுதிகளில் 45-55 கி.மீ வேகம் வரை காற்று வீசுக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory