» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் 4½ பேருக்கு கரோனா தடுப்பூசி

வெள்ளி 23, ஜூலை 2021 4:50:49 PM (IST)

குமரி மாவட்டத்தில் அனைத்து தடுப்பூசி முகாம்களிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதுவரை தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை 4½ லட்சத்தை கடந்தது. 

குமரி மாவட்டத்தில் கரோனா பரவலை  தடுக்க கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.  மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் 13 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. இதைத்தொடர்ந்து நேற்று 65 இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது.

அதாவது செண்பகராமன்புதூர், அகஸ்தீஸ்வரம் உள்பட 14 இடங்களில் ஆன்லைன் டோக்கன் முறை மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. குழித்துறை அரசு மருத்துவமனை மற்றும் கவிமணி மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் வெளிநாடு செல்பவர்களுக்கான 2-வது டோஸ் மட்டும் போடப்பட்டது . இதேபோல பூதப்பாண்டி, செண்பகராமன்புதூர், தடிக்காரன் கோணம், தம்மத்துகோணம் உள்பட மொத்தம் 51 இடங்களில் நேரடி டோக்கன் முறையில் தடுப்பூசி போடப்பட்டது.

நாகர்கோவில் மாநகராட்சியில் 5 இடங்களில் முகாம் நடந்தது. அதாவது அனைத்து வயதினருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி சால்வேஷன் ஆர்மி பள்ளி, இந்து கல்லூரி மற்றும் டதி பள்ளி ஆகிய 3 இடங்களில் செலுத்தப்பட்டது. ஒவ்வொரு பள்ளிக்கும் 200 டோஸ் வழங்கப்பட்டு இருந்தது. வடசேரி கனகமூலம் சந்தை மற்றும் மீன் மார்க்கெட் வியாபாரிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

குமரி மாவட்டத்தில் நடைபெற்ற அனைத்து தடுப்பூசி முகாம்களிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் அதிகாலையிலேயே முகாமுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். நேற்று மொத்தம் 10,341 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 53 ஆயிரத்து 748 ஆக உயர்ந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory