» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி மாவட்டத்தில் மத மோதல்களை ஏற்படுத்த முயற்சி : எஸ்பியிடம் பாஜக புகார்!

வியாழன் 22, ஜூலை 2021 4:46:44 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் மத மோதல்களை ஏற்படுத்த முயலும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்பியிடம் பாஜக மாவட்ட தலைவர் தர்ம ராஜ், அளித்த மனு : கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் அருமனை காவல்நிலைய எல்கைக்குட்பட்ட பனங்கரையில் கிறிஸ்தவ மதத்தை சார்ந்த எவருமே வசிக்காத பகுதியில் வேண்டுமென்றே இந்துக்களை மூளச்சலவை செய்து மதம்மாற்றும் நோக்கில் ஒருசிலர் வீட்டை ஜெபக்கூடமாக மாற்றி சட்டவிரோதமாக ஜெயம் செய்துவந்த நிலையில் அவர்களுக்குள் கோஷ்டிபூசல் ஏற்பட்டு அந்த கட்டிடம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்துவருகிறது. 

இந்த நிலையில் கடந்த 11.07.2021 அன்று சுமார் 20-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகளில் பிரதியாக சேர்க்கப்பட்டு நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ள அருமனை பகுதியை சேர்ந்த ஒரு சமூகவிரோதி தலைமையில் சில மதபோதகர்களும் தீவிரவாத அமைப்பைச்சார்ந்த சில நபர்களும் மேற்படி ஜெபக்கூடத்தை திறக்கப்போவதாக கூறி அதிகாரிகளை மிரட்டி அந்த பகுதியில் ஒரு போராட்டத்தை நடத்தினார்கள்.

இந்த போராட்டத்தில் உரையாற்றிய மேற்படி சமூகவிரோதிகள் அவர்களுடைய கோஷ்டிபூசலை மறைத்து சம்பந்தமில்லாத பாரத பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாகர்கோவில் சட்டமன்ற பா.ஜ.க. உறுப்பினர் காந்தி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களையும் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளையும் மிரட்டும் விதத்திலும் மிகவும் அருவருக்கத்தக்க விதத்தில் பேசியுள்ளனர்.

பொதுமக்களுக்கு மேற்படி தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது வெறுப்பு ஏற்படும் விதத்திலும் இந்துக்களையும் இந்து ஆலயங்களையும், இந்துக்களின் வழிபாட்டு முறைகளையும், இந்துக்களின் மதச்சடங்குகளையும் கொச்சைப்படுத்தி மிகவும் கேவலமாக காவல்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையிலேயே சவால்விட்டு பேசி அமைதி பூங்காவாக திகழும் கன்யாகுமரி மாவட்டத்தில் வேண்டுமென்றே தேவையற்ற மதமோதல்களை தூண்டும் விதத்திலும் பேசும் நேரலை தொகுப்புகள் சமூகவலைதளங்களில் பரவலாகிவருகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் மதமோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

இதுசம்பந்தமாக சம்பந்தப்பட்ட அருமனை காவல்நிலையத்தில் மேல்புறம் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் புகார் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக காவல்துறை தாமாக முன்வந்து துரித நடவடிக்கையெடுத்து இதுகுறித்து சட்டப்படி நேர்மையாக விசாரணை நடத்தி இதற்கு காரணமான மேற்படி சமூகவிரோதிகள் மீது சட்டப்படி வழக்குப்பதிவுசெய்து கைது செய்ய வேண்டிய காவல்துறையின் மெத்தனப்போக்கை கண்டித்து கன்யாகுமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் வருகிற 28.11.2021 புதன்கிழமை மாலை 04.00 மணிக்கு அருமனை சந்திப்பில் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்பதையும் இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

adminJul 24, 2021 - 02:01:48 PM | Posted IP 103.1*****

matham nale mothal thane baas.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory