» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பா.ஜ.க போஸ்டர்களில் பொன்.ராதாகிருஷ்ணன் புறக்கணிப்பு? குமரியில் சலசலப்பு!

செவ்வாய் 20, ஜூலை 2021 12:33:13 PM (IST)



கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க-வை கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக தன் கண்ணசைவில் வைத்திருந்தார் பொன்.ராதாகிருஷ்ணன். 1993-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க தலைவர் ஆனதில் இருந்து 2021 சட்டசபை தேர்தல் வரை கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க-வில் சிறு நிகழ்வாக இருந்தாலும் பொன்.ராதாகிருஷ்ணனின் கவனத்துக்கு வந்துதான் செல்லும். 

கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க தலைவர், இருமுறை மாநில தலைவர், இரண்டு முறை மத்திய இணை அமைச்சர் என பவர்புல் பதவிகளை வகித்தவர் பொன்.ராதாகிருஷ்ணன். 2021 சட்டசபை தேர்தலுடன் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலும் நடந்தது. கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பொன்.ராதாகிருஷ்ணனை அதன் பிறகு கன்னியாகுமரியில் காண்பது அரிதாகிவிட்டது. மத்திய அமைச்சர் பதவி அல்லது கவர்னர் பதவி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் எந்த பதவியும் அவருக்கு வழங்கப்படவில்லை. 

அவர் டெல்லியில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டார். அதன் பிறகு சென்னையில் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார், விரைவில் கன்னியாகுமரி மாவட்டம் வருவார் என கடந்த மாதமே நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால் அவர் வந்தபாடில்லை.இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் நிர்வாகிகள் சிலரும், நாகர்கோவில் மாநகர 29-வது வார்டு பா.ஜ.க சார்பிலும் மத்திய அமைச்சராக பொறுப்பு ஏற்ற எல்.முருகன் மற்றும் மாநில பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலை ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து தனித்தனியாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். 

அதில் பிரதமர் மோடி, அமித்ஷா, எல்.முருகன், அண்ணாமலை, எம்.எல்.ஏ-க்கள் நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி ஆகியோரது புகைப்படங்கள் உள்ளன. ஆனால், முன்னாள் மத்திய அமைச்ச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டிருந்தது. பொன்.ராதாகிருஷ்ணன் புகைப்படம் இல்லாமல் ஒரு சிறிய பிட் நோட்டீஸ் கூட வெளியாகாத நிலை கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 27 ஆண்டுகளாக இருந்தது. 

ஆனால், இப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் பொன்.ராதாகிருஷ்ணன் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு எந்த பொறுப்பும் இல்லாத நிலையில் அவரது புகைப்படத்தை போஸ்டர்கள் மற்றும் பிளக்ஸ் போர்டுகளில் வைக்க வேண்டாம் என மேல்மட்ட நிர்வாகிகள் சிலர் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory