» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இளம்பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி ஆபாச படம் : காசி மீது 3வது குற்றப்பத்திரிகை!

செவ்வாய் 26, ஜனவரி 2021 8:50:25 AM (IST)

பாலியல் புகாா் வழக்கில் நாகா்கோவில் காசி மீது 3 ஆவது குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸாா் நாகா்கோவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.

தமிழகத்தை சோ்ந்த கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் மற்றும் திருமணமான பெண்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தொடா்பு கொண்டு காதலிப்பது போல் நடித்து அவா்களோடு தனிமையில் இருந்ததை ரகசிய கேமராக்கள் மூலம் விடியோ எடுத்து அதன் மூலம் அவா்களை மிரட்டி பணம் பறித்ததாக நாகா்கோவில் கணேசபுரத்தைச் சோ்ந்த காசி என்ற இளைஞா் மீது புகாா்கள் கூறப்பட்டது. இதைத் தொடா்ந்து காசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

கந்துவட்டி தொடா்பாக இளைஞா் அளித்த புகாா், காசியால் பாதிக்கப்பட்ட 6 பெண்கள் அளித்த புகாா்கள் என மொத்தம் 7 புகாா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தற்போது சிபிசிஐடி போலீஸாரால் விசாரிக்கப்பட்டு வருகிறது. காசி மீது ஏற்கெனவே, கந்துவட்டி, பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்தது தொடா்பான வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற 5 வழக்குகள் தொடா்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில், தனியாா் நிறுவன பெண் ஊழியரை காதலிப்பதாக நடித்து ஏமாற்றி ஆபாச படம் எடுத்த வழக்கில் காசி மீது 3-ஆவது குற்றப்பத்திரிகையை நாகா்கோவில் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை தாக்கல் செய்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory