» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

காருடன் பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலி : 2 பேர் படுகாயம்

திங்கள் 21, செப்டம்பர் 2020 6:18:08 PM (IST)

வெள்ளிச்சந்தை அருகே காருடன் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற வாலிபர் பரிதாபமாக பலியானார். நண்பர்கள் 2 பேர் படுகாயமடைந்தனர்.

நாகர்கோவில் வெள்ளிச்சந்தை அருகே உள்ள சூரப்பள்ளத்தை சேர்ந்தவர் அபினேஷ் (22). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று நாகர்கோவிலுக்கு வேலைக்கு வந்து விட்டு பின்னர் பைக்கில் ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். அவருடன் பைக்கில் நண்பர்கள் அசோக் (28), ஜெகதீஷ் (20) ஆகியோரும் சென்றனர். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி பின்புற நுழைவு வாயில் அருகே வரும் போது எதிரே வந்த கார் மோதியது. இதில் பைக்கில் இருந்த அபினேஷ் உள்ளிட்ட 3 பேரும் தூக்கி எறியப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி அபினேஷ் உயிரிழந்தார். இது குறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குட்டி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory