» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க கோரி எஸ்டிபிஐ கட்சி மறியல் போராட்டம்

திங்கள் 21, செப்டம்பர் 2020 5:55:06 PM (IST)நாகர்கோவில் இளங்கடையில் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத குண்டு குழிகளான சாலைகளை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இளங்கடை பகுதியில் கச்சேரி சாலை உட்பட பல்வேறு சாலைகள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத தால் குண்டு குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் தினம் தினம் விபத்துக்கள் ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் இன்னலை சந்தித்து வருகின்றனர். இந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இளங்கடையில் இருந்து கச்சேரி செல்லும் சாலை சந்திப்பில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். சாலை சீரமைப்பதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்வதாக கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory