» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பஸ் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண் குழந்தை கடத்தல் : போலீஸ் விசாரணை

திங்கள் 21, செப்டம்பர் 2020 5:29:40 PM (IST)

குமரி மாவட்டம் குளச்சல் பஸ் நிலையத்தில் தூங்கி கொண்டிருந்த தம்பதியரின் 8 மாத பெண் குழந்தை கடத்தல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்தவர்கள் முத்துராஜா, புஷ்பவல்லி தம்பதியர். நாடோடி வாழ்கை வாழும்  இவர்கள் ஒரு குழுவாக நேற்று குளச்சல் பகுதியில் தேன் மற்றும் பாசி மாலை விற்பனைக்காக வந்தனர். பின்னர் நேற்றிரவு குளச்சல் பேருந்து நிலையத்தில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு அங்கே வந்த மர்ம நபர் ஒருவர் முத்துராஜா புஷ்பவல்லி தம்பதியரின் 8-மாத பெண் குழந்தை துர்காவள்ளியை கடத்தி சென்றுள்ளார். கண் விழித்து பார்த்த அந்த தம்பதியர் குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இது குறித்து குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி குளச்சல் பேருந்து நிலையம் மற்றும் முக்கிய பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி விசாரிக்க முற்பட்ட போது எந்த சி.சி.டி.வி கேமாராக்களும் மின் இணைப்பு இன்றி உபயோகத்தில் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து தனியார் கடைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி குளச்சல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தில் விசாரணைக்கு காவல் துறை சார்பில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராக்கள் உபயோகத்தில் இல்லாதது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory