» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆதிதிராவிடர் நலத்துறையில் சமையலர் பணி : எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணபிக்கலாம்

சனி 19, செப்டம்பர் 2020 6:13:46 PM (IST)

ஆதிதிராவிடர் நலத்துறையில் சமையலர் வேலைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே தகவல் தெரிவித்துள்ளார்.
                                                               
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் செய்திக்குறிப்பு : கன்னியாகுமரி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு 12 சமையலர் பணியிடங்கள் (07 ஆண்கள் மற்றும் 05 பெண்கள்) 15700-50000 என்ற ஊதிய பிணைப்பில் ரூ.15,700- ஊதியத்திலும் மற்றும் 4 தொகுப்பூதிய துப்புரவாளர் (02 ஆண்கள் மற்றும் 02 பெண்கள்) பணியிடங்கள் ரூ.3000- தொகுப்பூதியத்திலும் மற்றும் காலமுறை ஊதிய துப்புரவாளர் (ஆண்-01) ரூ.7700-24200 என்ற சிறப்பு ஊதிய பிணைப்பு ரூ.7,700- ஊதியத்திலும் காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க தகுதிகள்
விண்ணப்பதாரர் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்கவேண்டும்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமைத் தரப்டும்
18 வயதுமுதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்கவேண்டும்
கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்கவேண்டும்

தகுதியான நபர்கள் கன்னியாகுமரி மாவட்டம், மாவட்டஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலஅலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு 05.10.2020-க்குள் விண்ணப்பித்திட மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே,   கேட்டுக் கொண்டுள்ளார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory