» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தவறான சிகிச்சையால் மாணவன் பலி? டாக்டர் கைது!

சனி 19, செப்டம்பர் 2020 11:35:46 AM (IST)

அருமனை அருகே மாணவன் இறந்த சம்பவத்தில் டாக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அருமனை அருகே கடையாலுமூடு பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன், தொழிலாளி. இவருடைய மகன் அபினேஷ் (வயது 12), அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். சில நாட்களுக்கு முன்பு அபினேசுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவரை பெற்றோர் கடையாலுமூடு சந்திப்பில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். காய்ச்சல் குறையாததால் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலனின்றி அபினேஷ் திடீரென உயிரிழந்தான். அவரது உடலை பரிசோதனை செய்த போது கொரோனாவில் இறந்தது தெரிய வந்தது. இதற்கிடையே தவறான சிகிச்சை காரணமாக மாணவன் இறந்ததாக பெற்றோரும், பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தினர். இதனால், டாக்டரை கைது செய்யப்பட்டதுடன், விளவங்கோடு தாசில்தார் ராஜ மனோகரன் ஆஸ்பத்திரிக்கு சீல் வைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory