» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நிவாரண தொகை பெற நெசவாளர்கள் விண்ணப்பிக்கலாம் : குமரி ஆட்சியர் அறிவிப்பு

செவ்வாய் 7, ஜூலை 2020 1:49:46 PM (IST)

கொரோனா நிவாரண தொகை பெற நெசவாளர்கள் விண்ணப்பிக்கலாம் என குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்வடநேரே தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டஆட்சியர் பிரசாந்த்வடநேரே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, தமிழக அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை மூலம் கைத்தறி (மற்றும்) கைத்தறி பட்டு நெசவு மேற்கொள்ளும் நெசவாளர்களுக்கு கரோனாநிவாரணத் தொகை ரூ. 2,000 வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டங்களில் நெசவாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெறாத 200 யூனிட் விலையில்லா மின்சாரம் பயன்பெற்று வரும் நெசவாளர்கள் விண்ணப்ப மனுஆதார் அட்டைநகல்,வங்கி கணக்கு புத்தகம் நகல்,தமிழ்நாடு மின்சாரவாரியஅட்டை மற்றும் கடைசியாக செலுத்திய மின் கட்டண ரசீது நகலுடன் மாவட்டஆட்சியர் அலுவலக இணைப்பு கட்டிடம், 2-ம் தளம்,நாகர்கோவில் முகவரியில் அமைந்துள்ள உதவி இயக்குநர்,கைத்தறி மற்றும் துணிநூல் துறை அலுவலகத்திலோ (அல்லது) அருகில் உள்ள நெசவாளர்  கூட்டுறவு சங்கங்களிலோ விண்ணப்பங்களை 2 நாட்களுக்குள் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory