» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தனியாருக்கு மாறும் ரயில்வே நிர்வாகம் : குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் அச்சம்

செவ்வாய் 7, ஜூலை 2020 1:07:55 PM (IST)

ரயில்வே துறை தனியாருக்கு மாறும் அறிவிப்பு வெளியாகியுள்ளதால் இது குறித்து குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் அச்சம் தெரிவித்துள்ளது.

இது குறித்து குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் அச்சம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது,முதலில் கன்னியாகுமரி – சென்னை வழிதடத்தில் தனியார் ரயில் விடப்படும். ஆறுமாத காலத்துக்கு அடுத்து இந்த வழித்தடம் வருவாய் குறைவாக இருக்கின்றது என்று கூறி தனியார் கம்பெனியின் முதலாளி நேரடியாக  டில்லியில் போய் பார்க்க வேண்டியவர்களை பார்த்து அரசு ரயிலான கன்னியாகுமரி – சென்னை 12633-12634 ரயிலின் காலஅட்டவணையை மாற்றம் செய்து மோசமான காலஅட்டவணையாக மாற்றம் செய்யப்படும். இதற்கு எதாவது தெற்கு ரயில்வே அதிகாரி எதிர்ப்பு தெரிவித்தால் அவர் இந்த இடத்திலிருந்து டிரான்ஸ்பர் செய்து தனியார் ரயில் நிறுவனத்துக்கு வேண்டப்பட்ட ரயில்வே அதிகாரி அந்த இடத்தில் நியமிக்கப்படுவார். 

இது மட்டுமில்லாமல் கன்னியாகுமரி – சென்னை 12634 ரயிலை மதுரை அல்லது திண்டுக்கல் பக்கத்தில் வைத்து ஓர் ரயில் நிலையத்தில் சுமார் அரை மணி நேரம் நிறுத்திவைத்து விட்டு தனியார் ரயில் ஓவர் டேக் செய்து அதிகாலை 5 முதல் 6 மணிக்குள் சென்னை செல்லுமாறு இயக்கப்படும் அல்லது இயக்கவைக்கப்படும். அரசு ரயிலுக்கு வேகம் குறைவாக செல்லவும், தனியார் ரயில் அதிக வேகத்தில் செல்ல ரயில் நிறுவனத்துக்கு வேண்டப்பட்ட ரயில்வே அதிகாரியால் அறிவுறுத்தப்படும்.

அப்போது  கன்னியாகுமரி – சென்னை 12634 ரயில் சென்னைக்கு காலதாமதமாக வேண்டும் என்றே சுமார் 7:30 முதல் 9 மணிக்கு மேல் வந்து சேருமாறு இயக்கப்படும். இவ்வாறு இயங்கும் போது பயணிகள் கன்னியாகுமரி – சென்னை 12634 ரயிலை விட்டு தனியார் ரயிலுக்கு படிப்படியாக மாறிகொண்டே இருப்பார்கள். ஆறு மாதத்துக்குள் சுமார் 80 முதல் 90 சதவிகித பயணிகள் தனியார் ரயிலுக்கு சென்றிருப்பார்கள். அரசு ரயிலில் போனால் சரியான நேரத்துக்கு போக முடியாது என்று பரப்பி மக்கள் மத்தியில் பதியவைத்து விடுவார்கள். அடுத்து  கன்னியாகுமரி – சென்னை 12634 ரயில் 50 சதவிகத்துக்கும் குறைவான பயணிகளுடன் நஷ்டத்தில் இயக்குகின்றது என்று பத்திரிகை சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்புவார்கள். இந்த செய்தியை யாருமே பெரிதாக எடுத்து கொள்ளமாட்டார்கள். அடுத்து அரசு கன்னியாகுமரி – சென்னை  12634 ரயில் சேவையை சிறிது காலம் கழிந்து தானாகவே நிறுத்திவிடும். இதையும் யாரும் கண்டு கொள்ளவே மாhட்டார்கள்.

இப்போது தான் தனியார் ரயில் நிறுவனத்தின் ஆட்டம் ஆரம்பம் ஆகும். தங்கள் விருப்பத்துக்கு கட்டணத்தை அவர்களே நிர்னயித்து கொள்வார்கள். இதை அரசும் கண்டுகொள்ளாது. அடுத்து சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து தனியார் ரயில் நிறுவனம் தனது இலாபத்தை எல்லாம் எடுத்து விட்டு கள்ளகணக்கு எழுதி நஷ்டத்தில் நாங்கள் ரயில் இயக்குகின்றோம் இந்த நாட்டு மக்களுக்கு சேவை செய்கின்றோம் என்று ஆறு மாதம் பத்திரிகை சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்புவார்கள். பின்னர் அரசு தனது சொந்த நிதியிலிருந்து பலஆயிரம் கோடிகளை இலவசமாக தனியார் ரயில் நிறுவனத்துக்கு கொடுக்கும் இது மட்டுமில்லாமல் வங்கியிலிருந்து குறிப்பாக அரசு வங்கி பெரிய அளவில் கடன் தொகை வாங்கியிருக்கும். இதுதான் 2030க்குள் ரயில்வேறையில் இந்தியாவில் நடக்க இருக்கின்றது.

இந்த திட்டம் நடைமுறைபடுத்த ஒருசில நேர்மையாக அதிகாரி அதாவது ரயில்வே அதிகாரி அல்லது வங்கி அதிகாரி  அல்லது நீதிபதி மறுப்போ எதிர்ப்போ தெரிவித்தால் அவர் வேறு இலாகாவுக்கு மாற்றபடுவார். அல்லது தமிழ்படங்களில் வருகின்றது மாதிரி விபத்தில் கொல்லபடுவார். இவ்வாறு கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் அச்சம் தெரிவித்துள்ளது. 


மக்கள் கருத்து

sreeJul 7, 2020 - 04:39:11 PM | Posted IP 117.1*****

ITHA KETA DESA THORIKI NU SOLUVANGA

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory