» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இளம் பெண்ணுடன் உல்லாசம், வீடியோ எடுத்து மிரட்டல் : வாலிபர் மீது புகார்

செவ்வாய் 7, ஜூலை 2020 12:20:06 PM (IST)

கன்னியாகுமரியில் திருமணமான இளம் பெண்ணுடன் பழகி உல்லாசமாக இருந்ததை ரகசிய வீடியோ எடுத்து ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டுவதாக வாலிபர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் திருமணமான இளம்பெண்ணுடன் பழகி அவருடன் உல்லாசமாக இருந்து தற்போது அதை வீடியோ எடுத்து வைத்து மிரட்டும் வாலிபர் பற்றி  காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் இந்த புகாரை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது மனைவியை மகேஷ் இளங்கோ என்ற வாலிபர் செல்போனில் தொடர்பு கொண்டு பழகி உள்ளார். பின்னர் ஆசை வார்த்தை கூறி எனது மனைவியுடன் பாலியல் உறவு வைத்துள்ளார். அதை எனது மனைவிக்கு தெரியாமல் செல்போனில் பதிவு செய்துள்ளார். 

தற்போது அதை எனது மனைவிக்கு அனுப்பி வைத்து ரூ. 10 லட்சம் தராவிட்டால் சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாக மிரட்டுகிறார். இது பற்றி எனது மனைவியின் சகோதரர் சென்று மகேஷ் இளங்கோவிடம் கேட்டபோது மிரட்டல் விடுத்துள்ளார். எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory